பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்ருேரத்தில் சிறு பெண்கள் விளையாடுகின்ற காட்சி, காண் பவர் உள்ளத்துக் களி துள்ள வைக்கும் காட்சியாகும். ஒவிய மாகத் தன் மகள் நீராடும் காட்சி யைக் கண்டு மகிழும் தாய், அவளே ஊக்கப் படுத்துகிருள். . 9. அழகோவியமே நீராடு. கோட்டுப் பூக்கள் மிதந்துவரக் குதித்துப் பாயும் அலையோடே ஒட்டம் போடும் ஆற்றினிலே ஒருக ரையில் போயிறங்கிக் கூட்டுப் பெண்கள் சூழ்ந்திருக்கக் குடைந்து குடைந்து புதுப்புனலில் ஆட்டம் போட்டு விளையாடி - அழகோ வியமே நீராடு. மேலே மலேயில் ஊற்றெடுத்து மெல்லச் சோலே பலபுகுந்து கோல வயல்கள் வழி பெருகிக் குணவாய்க் கடலிற் போய்க்கலக்கும் சேலும் கயலும் பாய்ந்தோடிச் சேற்றைக் குழப்பும் ஆற்றினிலே மேலும் குடைந்து குடைந்தாடு மெல்லிய லன்பே நீராடு, அன்புத் தோழி முகத்தின்மேல் அள்ளி நீரைத் தெளித்தவளும் தன்பங் குக்குத் தெளித்திடுமுன் தலையை நீரின் உள்ளிழுத்துப் பின்பு வெளிப்பட் டெதிர்நின்று பெரிதும் குறும்பாய்ச் சிரித்தபடி அன்பு மகளே நீராடு - அழகின் செல்வி நீராடு, 124