பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. மணலிலே கிடந்து விளையாடுவ தைச் சிறு பிள்ளேகள் பெரிதும் விரும்புவார்கள். சிறுமியர் மன லிலே வீடு கட்டி விளையாடுவது வழக்கம். அந்தச் சிறுமியரோடு தன் மகனும் விளையாடட்டும் என்று இறக்கி விட்டால், புரியாக் . குழந்தையான அவன் அந்த வீடு களேத் தன் சிறிய காலால் மிதித்து அழித்து விடுகிருன். அவ்வாறு செய்ய வெண்டாமென்று அன்னை அவனே வேண்டுகிருள். சிதைக்க வேண்டாம் என்செல்வா. தெருவின் மணலேக் குவித்தொருபால் சின்னச் சின்ன வீடுகளே உருவாக் கித்தாம் விளையாடி உள்ளங் களிப்பார் சிறுமியரே. அருமைக் கண்ணே மணல்வீட்டை அழகு சிட்டுக் காலாலே உருக்கு இலக்கச் செல்லாதே உதைத்துச் சிதைக்கச் செல்லாதே. குவித்த மணலால் சுவரெழுப்பிக் குழிகள் தோண்டி அறைபலவும் வகுத்து மணலேக் குறைத்தொருபால் வாசல் வைத்து மகிழ்ந்திடுவார் சிரித்துக் கொண்டே மணல்வீட்டைச் சிதைத்து விட்டால் அப்பெண்கள் வருத்தங் கொள்வார் என்செல்வா வாராய் அங்கே செல்லாதே, கட்டிக் கட்டி உருவாக்கக் காலம் அதிகம் வேண்டுமடா எட்டி உதைக்க ஒருநொடியே இருந்தால் போதும் போதுமடா, சுட்டித் தனத்தை விட்டென்றன் சொல் இலக் கேளாய் என் செல்வா சிட்டுக் காலால் மணல்வீட்டைச் சிதைக்க வேண்டாம் என்செல்வா, 126