பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பற்றன. முஸ்லிம் புலவர்கள் ன்ட்ாத இலக்கிய வகையே. இல்லை எனக் கூறலாம். காப்பிய இலக்கணங்களைக்கொண்ட பேரி லக்கியங்களையும், ஆற்றுப்படை அந்தாதி, பிள்ளேத் தமிழ், அம்மானே, போன்ற சிற்றிலக் கியங்களே யும், மாலை. ஏசல், திருப் புகழ், கீர்த்தனே, சிந்து, கும்மி, ஆனந்தக்க ளிப்பு போன்ற மக்கள் இலக்கியங்களையும் தொட்டுத் துலக்கியிருக்கின்றனர். இவை அனைத்தும் தமிழுணர்வில் இஸ் லாமியப் பண்பாட்டைக் கலந்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவற்ருேடு *அரபி', 'பார்ஸி இலக்கிய மரபினைத் தழுவி படைப்போர், முனுஜாத்து. கிஸ்ஸா, மசாலா, நாமா என்னும் புதுவகை இலக் கியப்படைப்புக்களேயும் தமிழுக்கு தந்துள்ளனர். மேலும், மெய்ந் தெறி விளக்கப் பாடல்களும் மார்க்கப் பாடல்களும் ஏராள மாகப் பாடியுள்ளனர். இஸ்லாமியப் பேரிலக்கியங் களில் சீருப்புராணம் தலேயாய இடத்தைப் பெற்றுத் திகழ்கிறது. இது, அண்ணல் எம் பெருமாளுர் நபிகள் திலகம் (ஸல்) அவர்களைப் பாட்டுடைத் த லே வ ர க க் கொண்டு, அவர்கள் வரலாற்றை விவரிக்கும் ஒரு காப்பியமாகும். வோழ்க்கை வரலாறு’ என்னும் பொருள் படும் சீறத்' என்னும், அரபிச் சொல்லின் தமிழ் துரியே "சீரு' வாகும். அதோடு, புனித கதை' என்னும் பொருள்தரும் *புராணம்’ சேர்ந்து "சீருப் புராணம்’ என நூலுக்குப் பெயர் அமைந்ததாக அறிகின்ருேம். சீருப்புராணம் உமறுப்புலவரால் எழுதப் பெற்றது. உமறுப்புலவர், நெல்லே மாவட்டம் எட்டையபுரம் மன்னர் வெங்கடேச பூபதியின் அவைக்களப் புலவராகிய கடிகை முத்துப் புலவரின் மாணவராகும். இவர் தம்,ஆசிரியரிடத்ஆாதிடுவ தற்கு வந்த வடநாட்டுப் புதை ரர்கிய வ்ாலேவாருதிள்ை வர்தின் வென்று அவன் கொட்டத்தை அடக்கி வெற்றிக் கொடி நாட்டி ர்ை. அதன் பயனுக அவைக் களப்புலவரானர். உமறு, வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக் கிணங்க, சீருவைப் பாடத் தொடங்கினர். ஷேக் சதக்கத் துல்லாஅப்பா என்னும் மாமேதை அரபி நூல்களிலிருந்து நூலுக் கான கருத்துக்களேத் திரட்டிக் கொடுத்தார். வள்ளல் அபூ காலம்ே அவையில் சீரு அரங் கேறியது. பெருங்காப்பியம், அ ற ம், பொருள், இன்பம் வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களையும் விளக்குதல் வேண்டும் என்பர். இவற்றில், ஏதேனும் ஒன்று குறைந்தால் அது சிறு காப்பியம் எனப்படும். சீரு வீடு பற்றிக் கூற வில்லை. எனவே அது சிறு காப் பிய வகையில் சேரும். இத் நூலில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின், பிறப்பு, இ8ளமை, திருமணம், ஆற்றல், வெற்றி போன்ற செய்திகள் விரிக்கப் படுகின்றன. இந்நூல் விலாதத்துக்காண்டம் நுபுவ்வத்துக் காண்டம், ஹிஜாத் காண்டம், என்னும் மூன்று காண்டங்களாகப் பகுக்கப் பட்டுள்ளது. காண்டங்கள் படலங்களாக வகுப்பட்டுள்ளன.