பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தி அழகிரி கவினுற வாழியே! தேனும் பாலும் கலந்தால் சுவையே கூடும்! ஒரு மானும் காளையும் ஒரு மனதாயினர் என்ருல் உவப்பே நிறையும்! காதல் இன்பம் அந்தக் கலப்பிலே பிறக்கும்! மாண்புமிகு கலேஞரின் மகனும் அழகிரி வாண்முக நங்கை சாந்தித் திருவினைக் கலப்புத் திருமணம் புரிந்தார். கலப்பது திருமணம்! இதயங் கலப்பதும் இனங்கள் கலப்பதும் திருமணத்தால் என்பது வரலாருகும்! காவியங்களும் சாசனங்களும் இந்தக் கருத்தையே வலியுறுத்தும் மாண்புமிகு நாவலர் தலைமையில் மணவாழ்வு கண்ட செல்வச் சிட்டுக்களைப் பெரியாரும் பெரியோரும் வாழ்த்தினர்; இளந்தமிழர் யாமும் வாழ்த்திளுேம் இன்பம் நிறைகவே! 2 17