பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய் அவற்றின் நிர்வாகிகளி துர்விநியோகமும், கையாட லும் செய்யப்பட்டன. எனவே ஆங்கில அரசு ஆலய அறநிலைய சொத்துக்களே முந்தைய அரசர் கள் மேற்பார்வையிட்டதுபோல மேற்பார்வையிடும் உரிமையினே நிலைநிறுத்தி முதன் முதலில் இந்திய துணைக் கண்டத்தில் 1810 வங்காளத்துக்கென ஒர் சட்டம் கொணர்ந்தது. சென்னை மாநிலத்தில் முதன்முதலில் 1817ல் அத்தகைய சட்டத்தை ஆங்கில அரசு அமுலுக்குக் கொணர்ந்தது, இஃது இந்து அரசர்களும், முக லாய மன்னர்களும் அரசாண்ட காலங்களில் அமுலிலும், பழக்கத் திலுமிருந்த சட்டதிட்டங்களேயும் நடைமுறைக்கு கொண்டு வந்தது அன்றைய ஆங்கில அரசு-அற நிலேய சொத்துக்களேயும் அற நிலையங்களையும் அரசு அதிகாரி களது கடுமையான கண்காணிப் பில் வைக்க வேண்டியது அரசின் தலையாய கடன் என உணர்ந் தது. இந்த முறை 1889 வரை தங்குதடையின்றி அமுலில் இருந் இது. இத்தகைய முறைக்கு கிறித்துவ திருச்சபைகள் 1839ல் ஒர் எதிர்ப் பினைத் தெரிவித்தது. இந்து அறக் கட்டளேயும், இந்து ஆ லயங்களே யும் முகம்மதிய மசூதிகளையும் கிறித்துவர்களால் ஆளப்படும் ஆங்கில அரசு நிர்வகிக்கக் கூடாது? அரசின் கடமையல்ல என்று எதிர்த்ததால் ஆங்கிலேய அரசு கொஞ்சம் கொஞ்சமாக நிர் வாகப் பொறுப்பினைத் தளர்த்தி யது. இதன் நோக்கம், பொது வான தன்மை அரசினதும், அர சாங்க அலுவலர்களதும் தலே யீட்டை அற நிலையங்களின் நிர் வாகத்திலிருந்து விலக்கி மதத்தில் கற்றுள்ள அறநிலையங்களைச் சார்ந்த மதத்தை பாப்பும் தகுதி யுள்ள தனிப்பட்டவரிடம் ஒன்ப டைக்கவேண்டுமென்ற நல்லார் வத்தில் விளைந்ததுதான். 12-6-1841ல் சென்னே அரசு ரெவின்யூ போர்டுக்கு மேற்கண்ட ரீதியில் உத்தரவு வழங்கியது. 1839 - 1842 நான்காண்டு காலம் இந்து ஆலயங்களின் நிர் வாகத்திலிருந்து அாக தனது இணைப்பை துண்டித்துக் கொண் t-soils ஒழுங்குமுறைச் சட்டம் (Regulation Act) solopoflá, Q055grth 1842-1863 வரை அரசின் மேற் பார்வையிடும் பணி அறவே செய் யப்படவில்லை. விளைவு கேட் பாரும், மேய்ப்பாரும் இல்லாத தால் ஆலய பணங்களில் கையாட லும் துர்விநியோகமும் ஆலய நிர்வாகத்தில் அன்ருட நிகழ்ச்சி ஆயின! நிர்வாகக்கேடுகள் உச்ச நிலையில் இருந்தன. எனவே அரசின் மேற்பார்வையிடும் முறை அவசியம் என உணரப் பட்டது. எனவே தமிழக அரசு தண் டமிழ் ஆலயங்களில் தலையிடு கிறது என்ற குற்றச்சாட்டு ஓர் அர்த்தமற்ற கூப்பாடு அறநிலை யங்களையும் ஆலயங்களேயும் கால தேவன் கரங்களின் அழிவிலிருந்து காப்பாற்றி வரப்போகும் சந்ததி களிடம் ஒப்படைக்கும் ஒப்பற்ற பணியையும் அறநிலையங்கள், ஆலயங்களின் சொத்துக்களை அழிவிலிருந்தும் மீட்கும் அரிய பணியினையும் இவ்வரசு தனது கடமையாக ஆற்றி வருகிறது. 女 24