பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனித் தமிழுண்டோ ? மொழிகள் ஒன்ருேடொன்று கலக்கப் பெறுவதற்கு அவற்றை வழங்கும் மக்களின் நாகரிகமே வழியாயிருந்ததால், நாகரிகம் வாய்ந்த எந்த மொழியும் பிற மொழிக் கலப்பில்லாமல் இருத்தல் இயலாது. இது மக்களியற்கை யிகனயும் அவரது வாழ்க்கையின் இயல்புகளையும் அமைதியாக ஆராய்ந்து பார்ப்பவர்க்கல்லாமல் 'மற்றவர்க்கு ஒரு சிறிதும் விளங்க மாட்டாது. தமிழ் மக்கள் பண்டு தொட்டே நாகரிகத்திற் சிறந்தவ ராயிருந்ததனல் அவரொடு பல மொழி பேசும் பல நாட்டவரும் கலந்து பழகவே மற்ற மொழி களின் சொற்களில் சில தமிழிலும் காணப்படுவதாக ஆயின. இங்ங் னம் காணப்படுதல் தமிழ் மொழி -யின் நாகரிகச் சிறப்பினேயும் அதன் வளப்பத்தினையும் காட்டு கின்றதே யல்லாமல் அதற்கு அது தாழ்வாதலேக் குறிக்கின்றதில்லே உண்மை இவ்வாறிருப்ப, இதனைச் சிறிதும் உணர மாட்டா மல், சுவாமிநாததேசிகர் என்பார் தாம் இயற்றிய இலக்கணக் சொத்தில், 'அன்றியும் தமிழ் நூற்களவிலே அவற்றுள் ஒன்றே யாயினும் தனித்தமிழுண்டோ?” எனக் கூறியது வெற்ருர வார உரையாமன்றிப் பிறிதென்னே? -மறைமலையடிகள் தாலி இருக்கக் கண்டான் பயந் தான். சுந்தரியின் முகத்திலே ஒரு குறுநகை பிறந்தது. 'தங்கம் சின்னத் தாத்தாவை அழைத்து வா' என்று கூறிள்ை, சிறுவன் ஓடினன், அவனைப் பின் தொடர்ந்து சென்ருர் அருமைநாய கம்." அரைமணி நேரம் யாரும் அந்த அறைப்பக்கம் போகக் கூடாது என்று உத்தரவிட்டார். சுந்தரி தன் சரித்திரத்தைக் கூறி முடித்தாள் கனகனிடம். கனகன் தன் கதையைக் கூறினன். அவள் கட்டியிருந்த தாலியை முத்தமிட் Lss60s, 'அக்கரைக்குச் சென்றிருந்த சுந்தரியின் புருஷன் வந்துவிட் டார்' என்று ஆற்றுார் வாசிகள் பேசிக்கொண்டனர். அவர்களுக்கு சுந்தரியின் சோகக் கதையின் சூட்சமப் பகுதியை யாரும் சொல் லவில்லை. தாய்கட்டிய தாலி அக் கரைக்குப் போன அவள்-புருஷன் வந்து விட்டான். இனி இக்கரை யிலேதான் இருப்பானம்! என்று ஊரார் சொல்லிக் கொண்டார்கள். அவன் கட்டாத தாலி அவள் கழுத்திலே இருந்தது யாருக்குத் தெரியும்? அவனுடைய அந்த நாள் நடவடிக்கையை யார் அவர் களுக்குச் சொன்னர்கள். சுந்தரி: தங்கம்! உங்க அப்பாவை ரொம்ப நல்லவரென்று எண் ேைத! ஜாக்கிரதை ரொம்ப ரொம்பக் கெட்டவர். அவர் என்ன செய்தார் தெரியுமா? சொல்லிடட்டுமா? கனகன்: 'சுந்தரி, சுந்தரி, சொல் லாதே சுந்தரி! உனக்குக் கோடி புண்ணியம், அதை மட்டும் சொல்லாதே!' தங்கம்: ‘'அம்மா, அம்மா, சொல் லம்மா, சொல்லு! அப்பா! அம்மா வாயை மூடிடாதே. சுந்தரி: உங்க அப்பா என்ன செய்தாரு தெரியுமா? ஒரு நாள்......' கனகு, 'ஆ அப்பா அடிவயிற்றி லே வலிக்குதே அப்பா பொறுக்க முடியவில்லேயே, தம்பி ஓடிப்போய்க் கொஞ் சம் தண்ணிர் எடுத்துவ1.' 62