பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை வானெலியில் இத்தீய செயல் அடிக்கடி நிகழுவதை நாம் காணுகின்ருேம். கலைத் துறை அறிவுத் துறை தொடர்பான அறிஞர்களே அல்லது வல்லுநர்களே அழைத்துப் பேட்டி நடத்து கிருர்கள், அத்துறை பற்றிய பொது அறிவை மக்களிடையே பரப்பு: வதுதான் இப்பேட்டி நிகழ்ச்சிகளின் குறிக்கோளாகும். இக் குறிக்கோள் பாராட்டத் தக்கதேயாகும். ஆல்ை இப்பேட்டி நிகழ்த்துவோர்கள் பெரும்பாலும் கொச்சை மொழியிலேயே பேசு கிருர்கள். இது ஒரு குறிப்பிட்ட கூட்டத்தார்க்கு மட்டுமே புரியக் கூடிய பேச்சாகிறது. அது மட்டுமல்லாமல், இக் கொச்சை மொழி யோடு ஆங்கிலச் சொற்களையும் சொற்ருெடர்களையும் அளவில்லாமல் பேசுகிருர்கள். வல்லுநர்கள் அல்லது அறிஞர்கள் எனப்படுவோர். தம் பேட்டியின் பயன் என்ன என்பதை உணராத பொறுப்பற்றவர் களாய் இருப்பதாலேயே இப்பேட்டிகள் பயனற்றுப் போகின்:ன. பேட்டி அமைப்பாளர்களுக்கும் பொறுப்பில்லே; பேட்டியில் கல து: கொள்ள வருவோர்க்கும் பொறுப்பில்லே என்ருகி விடுகிறது. பொதுமக்கள் வரிப் பணத்தில், பொது மக்களுக்காக நடத்தப் படுகிற ஒரு நிகழ்ச்சி, பொது மக்களுக்குப் பல்துறை அறிவும் வளர் வேண்டும் என்ற சிறந்த நோக்கத்தில் நடத்தப்படுகின்ற நிகழ்ச், வெறும் கேலிக் கூத்தாகி விடுகின்றது. வானெலி நிகழ்ச்சியில் ஒl குறிப்பிட்ட நேரம் கழிகின்றது என்பதைத் தவிர இப்பேட்டி நிகழ்ச் யால் எவ்விதப் பயனும் ஏற்படுவதில்லை. பேட் டி கொடுப்பவர் தா. குறிப்பிட்ட துறையில் வல்லவர் என்பதை மட்டுமல்லாமல் ஆங்கில, திலும் வல்லவர் என்று விளம்பரப்படுத்திக் கொள்ள மட்டுமே 畿 பயன்படுகிறது; பொதுமக்களுக்குப் பயன்படுவதில்லே வானெலிப் பேட்டிகளில் மட்டுமின்றி, வானெலி நாடகங்களிலும்! சென்னை மாநகரில் நடைபெறும் பல்வேறு சபா' நாடகங்களிலும் இத் தீமையைப் பரவலாகக் காணுகின்ருேம். இந்த அமைப்பாளர்களும், பேட்டிகளில் கலந்து கொள்ளும் வல்லுநர்களும், பிறரும் இந்நிகழ்ச்சிகளெல்லாம் தமிழ் நாட்டுப் பொது மக்களுக்காக நடத்தப்படுகின்ற நிகழ்ச்சிகள் என்பதை உணர்ந்து ஆங்கிலம் கற்றவர்கள் கல்லாதவர்கள் ஆகிய எல்லா மக்களுக்குய தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு பகுதியில் வாழுகின்ற அனைத்துத் தமிழர் களுக்கும் பயன்படுவதற்காக நடத்தப்படுகின்றவை என்பதை உணர்ந்து பெறுப்புடன் நடந்து கொள்ளுவார்களா? பொறுப்பிது உள்ளவர்களுக்காவது பொறுப்புணர்ச்சி வருமா?