பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொள்ளி எறும்புபோல் தத்தளித்துக் கொண்டிருந்தான்.


மணிமகுடம் தரித்து நிற்கும் மன்னன் ஒரு புறம். சிதைந்த சிற்பமாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கும் தங்கமான தங்கை ஒரு புறம்! இவ்விருவரும் ஒருவர் பின் ஒருவராக அவன் கண்முன்னே நிழலாடிக் கொண் டிருந்தனர்.


'அம்மா! மதி கெட்டவன் இப்போது மன்னனாக இருக் கிறான்! இந்த மராட்டியத்தை உருவாக்கி அவனுக்கு இந்த நிலையை ஏற்படுத்திச் சென்ற சத்திரபதி சிவாஜியின் வார்த்தைக்கே மதிப்பு வைக்காத மடையன்! அவனை நான் என்ன செய்யலாம்? கொல்ல முடியும்! அவ்வளவுதான். குடியனே, வெறியனே நாட்டுக்கு தலைவகை அவன் இருக்கும்போது அவனை இல்லாதபடி செய்து விட்டால் நாடும் குழப்பமடையும், எதிரிகளுக்கும் இடங்கொடுத்து நாட்டையுங் கோட்டை விட்டவர் களாவோம்!


மானமே பெரிதெனக் கருதும் மாராட்டிய குல மங்கையாயிருக்கும் நீ! உன் கற்பின் களங்கத்தை ஊரறிவதற்குள் ஓடி மறைந்து விடு. நாடு மரணத்தை. ஆம் அதுதான் உனக்கு அமைதியை, அளிக்கக்கூடிய அருமருந்து.

மணக் கோலத்திலே காணவேண்டிய தமையன் மரணக் கோலத்திலே காணத் துடிக்கின்றானே, என்று நினைக்கிறாயா? மாசைத்துடைக்க அதுதான் வழி. உன் ஊனத்தை மறைக்க அதைத் தவிர வேறு வழியே கிடையாது” என்று பெரும் தொல்லையின் எல்லையிலே நின்று தன் உள்ளத் தை வெளிக்காட்டிவிட்டு வீட்டை விட்டகன்றான் கண்டோஜி.


89