பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(சென்ற இதழ்த் தொடர்ச்சி) அவிநயக்கூத்தை ஒற்றை நடி -கர் கவிதை நாடகம்' என்றே கூற வேண்டும். இக்கூத்தில் கதையை விட உணர்ச்சிக்கும்.மெய்ப்பாட்டு வளத்துக்கும், இலக்கிய நயத்துக் கும், அழகுணர்ச்சிக்கும், கற்பனே இன்பத்துக்குமே மு. த லிட ம் உண்டு. இது பலகாலம் வரை மக்களால் போற்றப்பட்டுவந்ததற் .குக் காரணம் சுவைஞரின் பேரறி வடைமையும் நிறைந்த கற்பனே உணர்ச்சியுமேயாகும். நுண்ணிய கலைநயத்தைப் பேர றிஞர்களும் நல்ல கல்வியாளருமே போற்றிச் சுவைத்துணர முடியும். பண்டைத்தமிழர் எத்தகைய கலே யுணர்ச்சியும் கற்பனை வளமும் நிறைந்தோராய் இருந்திருந்தனர் என்பதை இதல்ை நன்கு உணர முடிகிறது. இத்தகு உணர்ச்சி நாடகம்’ தமிழகத்திற்கே உரிய சிறப்புக் கலேயாகும். உலகில் இந்த வகை நாடக அமைப்பு வேறெந்த நாட் டிலும் இல்லாத முறையாகும். குறிப்பிட்ட கதைத் தலைவன் தலைவியர் இல்லாத நாடக அமைப்பு இலக்கியப்புலமை மிக் கவர்களால் மட்டுமே நன்குனர்ந் தின் புறக் கூடிய இயல்பினது. இக்கலேப்பண்பு உலகப் பொதுமை நாடகப் பண்பாம். இது தமிழ் மொழிக்கே உரிய தனிப்பண்பு மர பு; அதே நேரத்தில் உலகக்கல மரபு கனிந் .திட அமைந்த மரபு, வித்துமாகும். தமிழ்நாடகஇலக்கியம்.உலகநாடக இலக்கியமாக விளங்கிய மாண் பைத் தமிழ் நாட்டினரும், தென் ட்ைடினருமேஇன்னும் உணர்ந்து போற்ருதது வியப்ப்ளிக்கிறது. இவ்வுண்மையை இனிமேல் தான் உலகிற்கும் உணர்த்த வேண்டும். மேலே நாட்டு பால் நடனம் நம் நாட்டுக் குரவைக் கூத்தின் சிதைவு வளர்ச்சியே என்பதை யாரே அறிவர்? பொது விழாக்களுக்கும் த்ன்ரி விழாக்களுக்கும் மன்பதை விழர்க் களுக்கும் அரசியல்விழாக்களுக் கும் நாடகம்-நடனம் அழைத்து அதைச் சிறப்பும் உயர்வும் இன்ப மும் உள்ளதாக ஆக்கும். நாகிரீகப் பண்பாடும் தமிழகக் கலை வாழ்க் கைப் பண்பாடு ஆகும். வியக்கத் தக்க உலக உணர்வு மாண்பு இதில் புதைந்துள்ளது. தனி மனி தனுக்கு உலகிலுள்ள உரிமையும், உலகம் தனியாருக்கு ஆற்றும் கடமையும் இரு சார்பின் இயை பும், இருபக்கமும் இக்கல நிகழ் வமைப்பால் இணக்கப்பட்டுப் பொதுமை அறம் புரக்கப்படுவதை நோக்க வேண்டும். ஒரு நாட்டின் கலைகளின் அமை தியையும் பண்பையும் கொண்டே அந்நாட்டு வாலாற்றையும் மக்கள் வாழ்க்கை முறையையும் மின்ப தை அமைப்பையும் கணித்து விட லாம். தமிழக மன்பதை இயக்கம். நாட்டியல் மரபு ஆகியவை எவ் 92