இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அஞ்சுகச் செல்வ னென்பார்-கிளியே அருந்தமிழ்ச் செல்வ னடி! நெஞ்சில் கருணை யுள்ளான்-தமிழ் நிதியம் அவன்தா னடி! அஞ்சுகச் செல்வ னென்பார்-கிளியே அருந்தமிழ்ச் செல்வ னடி! அண்ணன் வழியில் வந்தான்-தமிழ் அன்பில் சிறந்தாண்டி எண்ணும் புதுமை யெல்லாம்-மிக எளிதில் வடிப்பா னடி! அஞ்சுகச் செல்வ னென்பார்-கிளியே அருந்தமிழ்ச் செல்வ னடி! இலக்கிய ஆர்வ முள்ளான்-கவி இன்பங் கொடுப்பானடி மலர்க்குவை சூட்டி இந்த-முழு மாநிலம் போற்று தடி! அஞ்சுகச் செல்வ னென்பார்-கிளியே அருந்தமிழ்ச் செல்வ னடி!