நாயகியாய் வந்தாள் நடிப்பில் வெளிப்பட்ட துாய்தான காதல் துடிப்பைப் புகழ்ந்துரைத்து காதல் இலட்சியத்தைக் கைப்பிடித்து நாமிருவர் வாழ்தல் விரைவினிலே வாராதோ என்றுரைப்பாள். கேட்டுவந்த கேள்விகளுக் கெல்லாம் இடமறிந்து வாட்டம் அடையாமல் மாற்ற முரைத்துவந்தான். சாலே வழிநடந்து சஞ்சலந்தா னில்லாமல் கோல நிலவொளியில் கூடியுரை யாடிவரும் காதலரை ஐயுற்றுக் கண்வைத்துப் பின்தொடர்ந்த சேதி யறிவானின் செய்கையினைத் தாமறியார். காவலர் இல்லத்தில் காதலியின் தந்தை பொன்னே நிகர்த்தவளும் போர்ப்புலியை யொத்தவனும் இன்னும் மணத்தால் இணையாத பேர்களென்று தானுணர்ந்து காவல் த&லமையதி காரியிடம் மீனின் விழியாளே மின்னற் கொடியாளேக் காதல் மணியனுடன் காண நடத்திவந்தான் ! காதலியும் காதலனும் காவல் நிலையமுற்ருர் ! மாலேப் பொழுதுமுதல் மங்கையினைக் காணுமல் வலே புரியாமல் வீற்றிருந்த பெற்ருேரும் காரிருளே சூழ்ந்துவரக் கண்டனரே யல்லாமல் சேருமெழில் மாது திரும்பிவரக் காணவில்லே. அன்னே மனங்கலங்கி; யாதும் புரியாமல் என்னென்ன வோகேட்க ஏற்ற விடையின்றித் தந்தை புறப்பட்டார்; தாம்கண்ட பேரையெல்லாம் இந்த வழியில் எழிலான பெண்ணுெருத்தி செல்லக்கண் டீரோ ! என் செல்வத்தைக் கண்டீரோ சொல்லுமெனக் கேட்டுத் தொடர்ந்து வழிதேடிக் காவல் நிலையத்தும் கால்வைத்து மேலேறித் தாவி யதிகாரி தம்முன்னே போய்நின்றே ஐயா பெரியவரே ! அன்புடனே நான்பெற்ற கொய்யாப் பழமனையாள் கொப்பு மலரனேயாள் :பண்புடனே நான்வளர்த்த பச்சைத் கிளியனேயாள் கண்ணின் மறையாமல் காவலிட்டுக் காத்திருந்த பூத்த மலர்ப்பாவை போனவள்தாள் மாலேயிலே காத்திருந்து காத்திருந்து கண்ணிரண்டும் பூத்தனவே ! தேடி யலந்தென்றென் செருப்புகளும் தேய்ந்தனவே! ஓடிவிடு வாள்ென் றுரைப்பத்ற்கோர் காரணமும் ið0
பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/102
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை