முன்னே வணக்கம் மொழிந்துவிட்டுக் காதலரைத தன்னே டழைத்துவந்த காரணத்தைச் சாற்றிநின்றன். எண்ணுத போதில் எதிர்நிற்குந் தந்தையினேக் கண்ணுலே கண்ட அமுதவல்லி மெய்மறந்தே அப்பா! வென் ருேடி அவர்தோளிற் சாய்ந்தாளே! எப்பாலுந் தேடி யெதிர்பார்க்கும் செல்வத்தைத் தன்முன்னே கண்டெடுத்த தந்தையும்தான் இன்னமுதம் அன்னவளேத் தாங்கி யகமகிழ்ச்சி கொண்டாரே! - என்ன வருமோ எதுவருமோ என்றேங்கி நின்ற மணியனேத்தன் நேரில் அழைத்தந்த காவல் அதிகாரி கண்ணில் சினம்காட்டி .யாவும் மனந்தெளியக் கேட்டறிந்தார்; அப்போதே கொண்ட சினந்தாழ்ந்து கூடும் கருணேயினல் செண்டுமணம் போலுறவு சேர்ந்தவிரு நெஞ்சுகளின் அன்பின் திறமறிந்தார் ஆதரவு தான்காட்டி இன்பம் வளர்த்துவிட எண்ணமிட்டார் அன்புளத்தால். அதிகாரி சொன்ன அன்புவழி. தந்தை மலேயப்பர் தம்மை யழைத்தருகே சொந்தக் கருத்தொன்றைச் சொன்னர் அதிகாரி. பெற்ற திருமகளின் போன்பைக் கொண்டவனுய்க் கற்றவய்ை நல்ல கருத்துடைய பேர்வழியாய்ச் சிந்தித்தே எந்தச் செயலும் புரிபவனுய் சிந்தையிலே உம்பெண்ணேச் சேர்த்திருக்கும் காதலனுய்த் தோன்றும் மணியன் துணையானுல் உம்பெண்ணும் ஆன்ற புலவர்களும் அன்புத் தமிழும்போல் ஊன்றி மணவாழ்வில் ஒற்றுமையாய் வாழ்ந்திடுவார். மான்விழியார் அன்பு மனம்வைத்த காதலரைத் தாம்பிரிய நேரிட்டால் தன்னந் தனியாகித் தேம்பி யழுதுலகில் தேய்ந்தெலும்புக் கூடாகி வாழ்வில் நடைபினமாய் வாடித் திரிவதின்றி .மீளத் திருமணத்தால் மேன்மையுறக் கண்டதில்லே. உள்ளம் பொருந்தி ஒருவனேத்தாம் கூடிவிட்டால் வெள்ளம்போற் செல்வம்; விதவிதமாம் இன்பங்கள் காட்டி யழைத்தாலும் கண்திருப்ப மாட்டார்கள்; கூட்டுக் கிளிபோலக் கொண்டடைத்துத் தாலியினே வேருெருவன் கட்டி, விரும்பிஎதிர் நின்ருலும் மாறுபட்ட வாழ்வை மதித்துவிட மாட்டார்கள். கட்டாய மாய்த்தாலி கட்டு மணவாளனிடம் பட்டாடை கட்டிப் பகட்டிச் சிரித்தாலும் 102
பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/104
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை