பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளம்பனே நுங்கு போன்ற ஈரிதழ் திறந்து கண்ணே வளம்படு வாழைக் கன்றின் வழவழ கைகால் ஆட்டிக் குளம்படு பூமுகத்தைக் குறுகுறு கண்னல் தூக்கி நிலம்பட வா, வா! உன்னே நீட்டியே அணைத்துக் . கொள்வேன்! ) கவிஞர்)(のク2。 ன்ை பூவிரல் தரையில் ஊன்றிப் புதுப்பழக் கன்னம் மின்ன மேவிடும் பூஞ்சிரிப்பை வெடுக்கென அவிழ்த்து விட்டுக் கூவிடும் குாலால் கொள்ளாக் குறிப்பினே உணர்த்திக் காட்டித் தாவியே வா, வா! உன்னைத் தாங்கியே அனைத்துக் கொள்வேன்? ஒவியம் சிரிப்பதைப் போல் ஓசையே இல்லாமல் நீ காவியச் சிரிப்பைச் சிந்திக் கைவிரல் கொட்டுகின்ருய்! துாவிய சொற்குழம்பில் தூக்கிய கவிதை என்னக் கூவியே வா, வா! நெஞ்சம் குளிர்ந்திட அணேத்துக் கொள்வேன்? மணித்தமிழ் மகனே! ஏனே மருண்டு நீ அழுகின் ருயோ? இனித்தமிழ் பேசப் போகும் இயற்றமிழ்க் கவியே! உன்றன் தனித்தமிழ் நாவில் நல்ல தாய்த்தமிழ் மழலே கூட்டி கனித்தமிழ்க் கண்ணுய் வா, வாr கவிதையாய் அனேத்துக் கொள்வேன்!