பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளந் தமிழா ! கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி இளந்தமிழா உந்தனது சிந்தனேக்கு எந்தனது விண்ணப்பம் ஒன்று கேளாய்! வளம்மிகுந்து வாழ்ந்தவர்கள் தமிழரென்று வரலாற்றில் படிப்பதல்லால் தமிழனின்று களம்புகுந்து தன்னினத்தின் மானம்தன்னே காப்பாற்றும் திறமையற்ரு னெனும்சொற் கேட்டென் உளம் நொறுங்கிப் போகுதடா! உன்லைன்றி உயர்நிலையைக் காண்பதற்கு எவராலாகும்? பெருந்தலேகள் தமிழினத்தின் உரிமைதன்னைப் பேணுமென்ற நம்பிக்கை யற்றுப்போச்சு! நிரந்தரமாய் அவரவர்தம் தன்னலத்தை நினைப்பதன்றிப் பொதுநலத்தை நினைப்பாரில்லே? வரம்பிகந்த பிற்போக்குச் சமுதாயத்தை வகைபடுத்தி முன்னேற்றங் காணவேண்டின் உரம்மிகுந்த இளந்தமிழன் உணர்ச்சி பொங்கி உருவாக்கும் புரட்சிவழி ஒன்றுதேவை! படித்தவர்க்கும் பாமரர்க்கும் ஏற்றதாழ்வு! பணக்காரன் ஏழையென்னும் ஏற்றதாழ்வு! தடித்துவிட்ட ஜாதிமத பேதமென்னும் சங்கடத்தால் விளேகின்ற ஏற்றதாழ்வு! கிடைத்துவிட்ட வாய்ப்பாலே உயர்ந்துவிட்டோர் கீழோராய் மற்றவரை யெண்ணும் போக்கு! பொடிப்பொடியாய் போகஇளந் தமிழா இன்றே பொங்கியெழு: புன்மையெலாம் பொசுங்கிப் போகும்! இலக்கியத்தில் கவிதைகளில் நாடகத்தில் இன்னபிற கலேத்துறையில் பிற்போக்காளர் தலையெடுத்துப் பழமையெலாம் என்றென்றைக்கும் சாசுவதமாய் நிலைத்திருக்கத் திருத்தொண்டாற்றும் கொலேக்கருவி தனே எழுதுகோலாய்க் கொண்டோர் கொக்கரிக்கின்ருர் அவர்தம் கொட்டமெல்லாம் உலேக்களத்தில் மெழுகெனவே புகைந்துபோக உன்னுடைய பணிநாட்டுக் குடனேதேவை!