படுத்திப் பயன்படுத்தத் தெரிந் தவன் சுதந்திர மனிதனாக உலவு கிருன். வீட்டுக்கும் நாட்டுக்கும் பயன் தருபவகை வாழ்கிருன். கட்டுப்பாடற்றவன் சிறைக்குள் தள்ளப்பட்டு அடிமையாகிருன். சமுதாயத்துக்குச் சுமை அவன். தனி மனிதனுக்கு எது கிடைக் குமோ அதுதான் அப்படிப்பட்ட சமுதாயத்துக்கும் கிடைக்கும். தமிழன் தன் கலேகளுக்கும் இலக்கியங்களுக்கும் பிற பண் பாட்டுத் துறைகளுக்கும் அன்று விதித்துக்கொண்ட சுய கட்டுப் பாடுகளே அவனுடைய வளர்ச்சிக் குக் காரணங்களாக விளங்கி விருக்கின்றன. இன்று அதே தமிழன் எந்தத் திசையை நோக்கி எவ்வாறு இழுத்துச் செல் லப் படுகிருன் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். கால மாற்றத்தில் கலைகள் காலம் மாறி விட்டது. எல்லாக் கலைகளுமே சமயத்துறையையோ பக்தி நெறியையோ சார்ந்துதான் இன்றும் இருக்கவேண்டும் என்று கூற முடியாது. ஜெட் விமானம் பறக்கும் யுகம் இது. பிற நாடு களின் கலாசாரப் பண்பாட்டு வளர்ச்சியும், வீழ்ச்சியும் நம்மைத் தாக்கவே செய்யும். பத்திரிகை, வானெலி சினிமா, டெலிவிஷன் , போன்ற இயந்திர சாதனங்கள் கலைகளை வேகமாகப் பரப்பும்ஆற் றல் பெற்றுள்ளன. - இந்த இயந்திரங்களால் கலா சாரப் பண்பாட்டு வளர்ச்சியை உலகில் தீவிரமாக ஏற்படுத்த வும் முடியும்; அழிக்கவும் முடி யும். விஞ்ஞானமும் தொழில் துறையும் புற வாழ்க்கை வசதி களைப் பெருக்க உதவுகின்றன. அதே சமயம் அணு குண்டுகளே யும் அவைதான் உற்பத்தி செய் திருக்கின்றன. ஆகவே, விஞ்ஞான வளர்ச்சி யையும், தொழிற் புரட்சியையும் நாம் குறை கூறிப் பயனில்லே. அவற்றை ஆக்கரீதியாகப் பயன் படுத்துவதும், அழிவை நோக்கித் திருப்புவதும் நம் கையில்தான் இருக்கின்றது. கலாச்சாரப் பண் பாட்டுத் துறையின் வளர்ச்சிக். கும் அதன் வாயிலாக மனிதனின் மன வளர்ச்சிக்கும் பயன்படுத் தப் பட வேண்டியவை அச்சியந் திரம், ஒலிபெருக்கி, சினிமா, யந் திரம் போன்றவை. இவை இன் றைய நூற்ருண்டு வாழ்க்கையின் அங்கங்களாகி விட்டன. இந்த இயந்திரங்கள் நம்மு டைய கலேகள், கலாசாரம், பண் பாடு, இவற்றை நல்லவிதமாக வளர்க்கவும், பரப்பவும் உதவி செய்கின்றனவா? அல்லது அவற். றினே நாம் மறக்கும் அளவுக்கு கலாசார வீழ்ச்சிக்குக் காரண் மாக இருக்கின்றனவா? மேலே நாட்டுக் கலாசார மோதுதல் களேயோ, நம் நாட்டின் பிறபகுதி கலாசாரக் கலப்பையோ நம் மால் புறக்கணிக்க முடியாது. ஆனல் மேலைநாட்டு கழிசடைப் போக்குகளே நாம் கலாசாரம் என்று ஏற்றுக் கொள்வது சரியா என்பதையும் சிந்திக்க வேண்டும் எதிலும் கொள்ள வேண்டியதைக் கொண்டு, தள்ள வேண்டியதைத் தள்ளுவதுதான் முறையாகும். நம்முடைய பயில் முறை, நாடக மேடைகளில் நடிக்கப் பெறும் பல நாடகங்கள், நம்மு டைய திரைப் படங்கள், நம்மு டைய பத்திரிகைகளில் வெளி: வரும் கதை-கட்டுரை-படங்கள், பல அரங்குகளில் முழங்கப்படும் இசைகள், ஆடப்படும் ஆட்டங். கள் இவ்வளவையும் எடுத்துக் கொண்டு நாம் ஆய்வு நடத்திப் பார்த்தால் நம்முடைய கலாச் சாரத்தில் எத்தனை சதவீதம்கலப் படம் என்பது விளங்கும். கலப் 86
பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/38
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை