எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! -பாவேந்தர் பாரதிதாசன் இளந்தமிழன் எழுந்து விட்டான்! இளந்தமிழன் எழுந்துவிட்டான்! உதயசூரியன் உதித்தது போல் ஒளி பெருகக் கதிர் விரிய உல கெங்கும் எழுச்சிகாண இதயக் கமலங்கள் விரிய ஏற்றமிகு தமிழிசை பாடிக்கொண்டு இளந்தமிழன் எழுந்து விட்டான். தமிழ் நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் வைத்த தகைசர்ல் பெருந்தகையாம் அண்ணுவின் பிறந்த நாளிலே மொழியுணர்வோடும் நாட்டுணர்வோடும் எழில் பெருகத் திருப்பெருக ஏற்றத்தோடும் புதுத் தோற்றத்தோடும் இளந்தமிழன் எழுந்துவிட்டான். தமிழ்பாடித் தமிழ்பாடிச் செம்மாந்த இதயங்கொண்டு தமிழகத்து அரியணையில் வீற்றிருக்கும் சிங்கத் தமிழ் மறவர் தங்கக் குணம் படைத்த கலைஞர் திருக்கைகளால் வெளியிடப் பெறும் பேறு பெற்று சீருஞ்சிறப்போங்கத் திருவும் மணங்கமழ இளந்தமிழன் எழுந்து விட்டான்! தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சாய் வருதல் வேண்டும் என்று பாவேந்தர் கண்ட கனவு நனவாகி நிகழ்ந்துவரும் நல்ல நாட்களிலே, - எங்கும் தமிழ், எதிலும் தமிழ், எல்லாம் தமிழ் என்ற உணர்ச்சி வெள்ளம் கரை புரண்டோடும் உற்சாகமான நேரத்திலே, 2
பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/4
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை