பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பம் மிகப் பெருகுது ! ஒடிஒடி நாட்டிலெங்கும் உண்மையைப் பரப்புவாய் ஊனமான அடிமைவாழ்வை உதறித்தள்ள ஒதுவாய் வாடிவாடி அறம்மறந்து வறுமைப்பட்ட தமிழரை வாய்மையோடு தூய்மைகாட்டும் வலிமைகொள்ளச் செய்குவாய் கூடிக்கூடிக் கதைகள் பேசிச் செய்கையற்ற யாரையும் குப்பையோடு தள்ளிவிட்டுக் கொள்கையோடு நின்று நீ பாடிப்பாடித் தமிழின் ஒசை உலகமெங்கும் பரவவே பார்த்தயாரும் வார்த்தைகேட்டுப் பணியுமாறு சேவைசெய். தமிழனென்ற பெருமையோடு தலே நிமிர்ந்து நில்லடா தரணியெங்கும் இணையிலாஉன் சரிதைகொண்டு சொல்லடா அமிழ்தமென்ற தமிழினேசை அண்டமுட்ட உலகெலாம் அகிலதேச மக்களுங்கண் டாசை கொள்ளச் செய்துமேல் கமழ்மணத்தின் தமிழில்மற்ற நாட்டிலுள்ள கலேயெல்லாம் கட்டிவந்து தமிழர் வீட்டில் கதவிடித்துக் கொட்டியே நமது சொந்தம் இந்த நாடு நானிலத்தில் மீளவும் நல்லவாழ்வு கொள்ளச் சேவை செய்துவாழ்க நீண்டநாள். வெ. இராம லிங்க னு ர்