பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக அரசின் தலைமைச் செயலகத்திலும், பள்ளிகள், கல்லூரி கள், பல்கலைக்கழகங்கள் எங்கும் தமிழ்மொழி முதலிடம் ஏற்றுவரும் எழுச்சிமிக்க காலத்திலே, இளந்தமிழன் தமிழ்ப்பணி செய்ய முன்வந்திருக்கிருன். இளந்தமிழன் பணி எத்தகையதாய் இருக்கும்? எத்தகையதாய் இருக்க வேண்டும்? இன்று போல் தமிழ் எழுச்சி பெற்றிருந்த இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்னல் மூவேந்தர் ஆண்ட காலத்தில் முத்தமிழ்ப் புலவர் களும் கூடிச் சங்கம் வைத்துத் தமிழ் இலக்கியத்தை சங்கப் பலகையில் வைத்து ஆராய்ந்து முறையாக அரங்கேற்றி வெளியிட்டது போல், அவ்வாறு வெளியிட்டபோது, தமிழ் மரபு காத்து, தமிழ்ப் பண்பாடு காத்து வெளிவரும் நூல்கள் தமிழ் ஏற்றத்தை நாற்றிசையும் போற்றும் :படியாக அமையும்படி விழிப்போடு பார்த்துக்கொண்டார்களே அது போல ஒரு விழிப்புணர்ச்சியைத் தூண்டுவதாக அமையும் இளந்தமீ ழனின் தமிழ்ப்பணி. தமிழ் இலக்கியக் கட்டுரைகள் மட்டுமன்றி, புத்திலக்கியங்களான கவிதைகள், சிறு கதைகள், நெடுங்கதைகள் ஆயவற்றையும், அறி வியல் துறைசார்ந்த உயிரியல், விலங்கியல், மருத்துவ இயல், மனே தத்துவ இயல், பெளதிகம், இரசாயனம் போன்ற பல துறையறிஞர் களேயும் அணுகி எளிய தமிழில் எல்லோர்க்கும் விளங்கும்படி எழுதச் செய்து வெளியிடுவதும் இளந்தமிழனின் பணியாய் அமையும். இளைஞர்க்குப் பல்துறைக் கல்வியிலும் ஒர் ஈடுபாடு உண்டாவ தற்கு ஒரு துாண்டுகோலாய் இளந்தமிழன் இருப்பான். புத்தகங்கள், பத்திரிகைகள், நாடக மேடைகள், திரைப் படங் கள், பொது நிகழ்ச்சிகள், வானெலி முதலிய இலக்கியத் துறை சார்ந்த எல்லா இடங்களிலும் தமிழ்ப் பண்பாடு காத்துத் தமிழ்மொழி ஆயுணர்வு ஓங்கிட இளந்தமிழன் பணி புரிவான். இளந்தமிழன் பணி சிறக்க தமிழ்ப் பெருங்குடி மக்கள் அனைவரும் இளந்தமிழனுக்குச் செய்யத்தக்க உதவிகள் அனேத்தும் செய்துதமிழ்ப் பெருமை உலகமெங்கும் பரவ-தமிழ்ப் பண்பாடு ஓங்க ஒத் துழைப்பு நல்க வேண்டும் என்று வேண்டுகின்ருேம்.