கள்?’ என்று ரங்கநாதனைக் கேட்டேன். 'என்ன செய்வோம், அநாதை விடுதியில் சேர்த்து விடுவோம்’ என்று அவர் எவ்விதமான உணர்ச்சியுமின்றிப் பதிலளித் தர்ா. எனக்கு என்னவோ போலி ருந்தது. அந்தப் பையனை அநாதை என்ற பெயரில் வளரவிடக் கூடாது என்று எனக்குத் தோன் றியது. அந்தச் சிறுவனப் பார்க் கப் பார்க்க, அவன் அநாதையாக வளரப் பிறந்தவனல்ல என்ற எண்ணம் என் மனத்தின் அடித் தளத்தில் வலுப்பட்டுக்கொண்டே வந்தது என் ஆவலே அடக்க முடியாமல் நான் வாய்விட்டுக் கேட்டு விட்டேன். 'இன்ஸ்பெக்டர் சார், நான் இந்தப் பையனை வளர்க்க அனு மதிப்பீர்களா? அதாவது அவனு டைய பெற்ருேர் அகப்படாவிட் டால், அல்லது அகப்படுகிற வரையில், நான் என் வீட்டில் வைத்து வளர்க்கலாமா?" இன்ஸ்பெக்டர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த் தார். இது என்ன பைத்தியக் காரத்தனம்? என்று கேட்பது போலிருந்தது அந்தப் பார்வை, என்னைப் போன்ற நிலையில் உள் ள வ ர் க ள் இப்படிப்பட்ட ஆசைகளைக் கொண்டால் அது பலவிதமான எண்ணங்களை உண் டாக்கச் செய்யும் என்பதில் ஐய மேன்ன? யாராவது பிள்ளையில் லாத பெரியவர்கள் இப்படி ஆசைப்பட்டால் அர்த்தமுண்டு. ரங்களுதன் நான் ஓர் இளைஞன். எனக்கு மணமாகி மூன்று ஆண்டுகள் தான் ஆகிறது. ஒன்றரை வயதுக் குழந்தையொன்று வீட்டில் நடை பழகிக் தொண்டிருக்கிறது. அடுத் தடுத்து இன்னும் எத்தனையோ பிறக்கப்போகின்றன. இப்படிப் பட்ட நிலையில் உள்ள நான் ஓர் அநாதைக் குழந்தையை எடுத்து வளர்க்க ஆசைப்பட்டது குழப் பத்தைத்தானே உண்டாக்கும். சிறிது நேரம் பேசிக்கொண்டி ருந்ததில் இன்ஸ்பெக்டர் ரங்க நாதன் எனக்கு அந்தக் குழந்தை யின் மேல் உண்டாகிவிட்ட அசைக்க முடியாத ஈடுபாட்டைக் கண்டு என் வேண்டுகோளுக்கு ஒப்புக் கொண்டார். சில பாரங்களில் கையெழுத் திட்டுவிட்டு நான் அ ந் த ப் பையனை என் வீட்டுக்குத் தூக் கிக் கொண்டு சென்றேன். பிள்ளையை இறக்கி விட்டு நான் விஷயத்தைச் சொன்னபோது, 'இது என்ன பைத்தியக்காரத் தனம்?’ என்று தான் என் மனைவி கேட்ட்ாள். நமக் கென்ன பிள்ளை குட்டி இல் லையா??' என்று அடுத்த கேள்வி யையும் அவள் கேட்டாள். - 'பிள்ளை குட்டியில்லாதவர்கள் தான் இன்னெரு பிள்ளையை எடுத்து வளர்க்க வேண்டுமா?" என்று நான் கேட்டபோது அவள் எனக்குப் பைத்தியம் முற்றி விட்டதென்றே நி னே த் தி ரு க் கிருள். நாட்டில் உள்ள அநாதை களின் எண்ணிக்கை பற்றியும், அநாதைகள் அ தி க ம கி க் கொண்டு போவதால் நாட்டில் 50
பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/52
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை