அரை நாள் வேலையோடு மூடி விட்டார்கள். தினம் மாலை 6 மணிக்கு வீட்டுக்கு வருகிறநான், அன்று பசல் இரண்டு மண்ணிக்கே வந்து விட்டேன். வீட்டில் நான் கண்ட காட்சி அப்போது என் மனத்தை உலுக்கிவிடவில்லை என் ருலும், இன்று நினைத்துப் பார்க் கும்போது எரிச்சல் தருவதாகத் தான் இருக்கிறது. - வெயில் நேரம். என் பிள்ளை கள், மூவரும் மனேவியும் கூடத் தில் படுத்துத் துரங்கிக் கொண் டிருந்தார்கள். கோபு அங்கே யில்லை. சிறிது நேரம் சென்று நான் கொல்லேப்புறம் சென்ற போது, அங்கே அவன் தன் சிட் டுக் கைகளால் பாத்திரம்துலக்கிக் கொண்டிருந்தான். -
- கோபு. நீ ஏனடா இந்த வேலையெல்லாம் செய்கிருய்?? என்று அவன் கைகளைக் கழுவி விட்டு உள்ளே அழைத்துக் கொண்டு வந்தேன். என் மகன வியை எழுப்பி அவனே வேலை வாங்கியதற்காகக் கோபித்துக் கொண்டேன். அவள், தான் அவனைப் பாத்திரம் துலக்கச் ச்ொல்லவில்லையென்றும், அவை கப் போய்த் துலக்கியிருக்கிருன் என்றும் சொல்லித் தப்பித்துக் கெர்ண்டாள்.
நான் அப்போது இந்த நிகழ்ச் சியைப் பற்றிப் பெரிதாக ஒன் றும் நினைக்கவில்லை. என் மனை விய்ோ, நான் இல்லாத சமயங் களில் அந்தப் பிள்ளேயைப் பல வாறு வேலை வாங்கி வந்திருக் கிருள், கடைசிப் பையனைத் தவிர மற்ற இரண்டு பேரையும் கோபு வையும் பள்ளியில் சேர்த்து விட் டிருந்த சமயம், மற்ருெரு முறை நான் அவளுடைய பேதச் செயலே. காண நேர்ந்தது. ஒரு நாள் ஆபீஸ் வேலையாகத் தெருவில் போய்க் கொண்டிருந்தபோது கொதிக்கும் வெயிலில் கோபு. இரண்டு டிபன் காரியர்களைத் தூக்கிக்கொண்டு எதிரில் வந்து கொண்டிருந்தான். * எேன்னடா இது?’ என்றேன், 'தம்பிகளுக்குச் சாப்பாடு கொண்டு போகிறேன்' என் ருன். மேலும் அவனைக் கிண்டிக் கிளறி விசாரித்ததில் வாடிக்கை யாக அவன் தான் மத்தியானம் சோறு எடுத்துப் போவதென்று தெரிந்தது. அன்றைக்கே நான் பிள்ளை களுக்குச் சாப்பாடு எடுக்க ஓர் ஆயாவை ஏற்பாடு செய்து விட் டேன். என் மனைவியையும், அவனை வேற்றுமையாக நடத்தி, யது குறித்துக் கடுமையாகப் பேசிக் கண்டித்தேன். அவள் எதற்கும் அஞ்சவில்லை. என் எதிரில் எதுவும் நடக்காதது போலவேயிருந்தது. ஆனல் என் கண்ணுக்குப் பின்னல் -நான் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு-அவள் தன்னிச்சைப் படியே நடந்து கொண்டிருக்கி ருள். கோபுவை ஒரு வேலைக் காரனைப் போலவே-சம்பளமில் லாமல் கிடைத்த ஒரு வேலைக் காரனைப் போலவே-நடத்தி, யிருக்கிருள். இத்தனைக்கும் அந்: தப் பிள்ளே என்னிடம் ஒரு வார்த்தை வந்து சொன்ன தில்லை. 54