பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருப்புச் சட்டிகள் துருப்பிடிக்க வழியுண்டு. ஆகையால், புேதிய எண்ணெயை எடுத்து சட்டியின் இருபுறத்திலும் இடைவெளிவிடா மில் இலேசாகத் தடவிவைக்க வேண்டும். நம் கவனக் குறைவு காரண மாக எப்போதாவது இச்சட்டி களில் துருப்பிடித்து விட்டால்அல்லது நெடுநாளாகக் கவனிக் காமல் இருந்த காரணத்தால் துருப்பிடித்திருந்தால், அ ைத நீக்குவதற்கு மண்ணெண்ணெ யைப் பயன்படுத்த வேண்டும். துருப்பிடித்த இடத்தில் மண் ணெண்ணெயை ஊற்றி, ஸ்டீல் உல்லேக் கொண்டு தேய்த்துத் துருவை அகற்ற வேண்டும். பிறகு மண்ணெண்ணெய் நாற்றம் போக அதை சோப்பிட்டுக் கழுவ வேண்டும். சமையலுக்குப் பயன் படாத, வீட்டிலுள்ள வேறு இரும் புச் சாமான்களில் துருப்பிடிக்கா மல் பாதுகாக்க அவற்றிற்கு ஈய வெள்ளே அடித்து வி டு வ து நல்லது. பார்க்கப் பார்வையாக வம், துருப்பிடித்துப் பாழாகாம லும் இருக்கும். டின் சாமான்களை சோப்பிட் டுக் கழுவி, ஈரமில்லாமல் நன்ற கத் துடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். அடுப்பில் பயன்படுத் தக் கூடிய தகரங்களே, அவற்றின் மீது கரிப் பிடித்திருந்தால் சாம்பல் போட்டுத் தேய்த்துக் கூடுமான வரை தான் கரியை அகற்றவேண் டும். பற்றுப் பிடித்திருந்தால் தண்ணிர் ஊற்றி ஊறவைத்துப் பிறகு தேய்த்து அதை அகற்ற வேண்டும். அரிவாள்மனே கத்திகள் முத வியவற்றை எப்பொழுதும் கூர் மையாக வைத்திருக்க வேண்டும். கத்திகளே காய்கறி நறுக்குவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தமிழன் விட்ட கப்பல் நம்மைத் தலைநிமிர்த்தும் கப்பல் சிதம்பரத்தின் கப்பல் நம் சுதந்திரத்துக் கப்பல் பாரதத்துக் கப்பல் நமது பாக்கியமடி கண்ணே வீரர்விட்ட கப்பல் நமக்கு வேண்டுமடி கண்ணே! கத்திப் பிடிகளைப் பளபளப்பாக வைத்திருக்க அவ்வப்போது, பாதியாக நறுக்கிய எலுமிச்சம் பழத் துண்டை உப்பில் தோய்த் தெடுத்துப் பிடிகளில் தேய்க்க வேண்டும். கத்திகளில் உள்ள கறை கார்க்கு ஒன்றை எடுத்துத் தேய்த்தால் போய்விடும். ஸ்டீல் உல்லேப் பயன்படுத்து வதில் உள்ள தொல்லே அது எளி தாகத் துருப்பிடிக்கும் என்பது தான். துருப்பிடித்த ஸ்டீல் வில் லேப் பயன்படுத்துவதைப் போல். கெடுதல் வேறில்லே. அது துரு பிடிக்காமல் இருக்க அதை எப் போதும் ஒரு கண்ணுடிக் குவனே யில் சோப்புக் கரைசல் நீருக்குள் அமுக்கி வைத்திருக்க வேண்டும். சோப்புக் கரைசலை நாள் தோறும் மாற்றிக்கொண்டிருக்க வேண்டும். 69