பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துாது சென்ற ஒளவை, போருக் குத் துணிவுகொண்ட தொண்டை மானச் சந்தித்தாள். - புலவர் பெருமாட்டியை வர வேற்ருன் வாள்வேந்தன்- அதற் குப் பின்னர் வாய்வீரம் பேசி நின்றன்! வந்த மூதாட்டியோ அத்தனேயும் கேட்டுக்கொண்டு பதிலேதும் பேசாமல் நின்ருள். திரட்டி வைத்திருந்த படை யினைத் திறம்படக் காட்டின்ை. குவித்து வைத்திருந்த போர்க் கருவிகளின் நேர்த்தியை விளக்கி ன்ை. கண்டனள் ஒளவை-களி கொண்டு மெச்சினள் காஞ்சிக் காவலனே! தொண்டைமானே உச்சி குளிர்ந்தான் உணர்ச்சிப் பெருக் கால்! மெச்சிய புலவர்க்கு புகழா ரம் சூட்டினன். மகிழ்ச்சியின் உச்சியிலே அவன் அமர்ந்த நேரம் பார்த்து ஒளவை சொன்ள்ை. 'காஞ்சிக்காவல! கூர்மழுங்கா வேலும் - குத்துப்படா குத்து 'வாளும் - களங்களேச் சந்தித்தறி யாத கருவிகளும் ஏராளம் நின் பாசறையிலே! இவ்விதம் புதுப் போர்க்கருவிகளே ச் சேர்த்து வைத்திருப்பதால் மட்டும், வெற்றி உன் பக்கம் நிற்கும் என்பது என்ன நிச்சயம்? மேலும் உன் படை வீரர்கள் களத்தைச் சந் தித்தறியாதவர்கள். போர் முழக்கமிடப் புதுப்படையைத் திரட்டி வைத்திருக்கின்ருய்! இந் நிலையில் வெற்றி உன்னே எப்படி நாடும்? போர்க்கலேயில் அநுபவமுள்ள வனிடம், இனிமேல் அநுபவம் பெறப் போகிறவன் போய் எந்த விதத்தில் வெற்றி காணமுடியும் என்று நீ நம்புகிருய்? எனவே, உன் . த.வருண எண்ணத்தைத் தவிர்த்து விடு' என்று துணி வோடு கூறி முடித்தாள். 'உம் பேச்சுத் திறத்தால் என் எண்ணத்தையே அடியோடு சாய்த்துவிட்ட ஒளவை மூதாட்டி யே! நீவிர் வாழ்க! நின் புலமை வாழ்க! இனிப் போரில்லே எனப் போய்ச் சொல்லுங்கள்! அதிக மான் நெடுமான் அஞ்சி இனி எனக்கு உற்ற நண்பன் என்பதை உரையுங்கள்' என்று திருந்திய தொண்டைமான் உரைத்தான். மட்டற்ற மகிழ்ச்சிகொண்ட ஒளவை, தொண்டைமானிடம் விடை பெற்றுக்கொண்ட தகடுர் நோக்கிப் புறப்பட்டாள். துணை வந்த இரு குதிரை வீரர்களுடன் பல்லக்கில் சென்று கொண்டிருந்தாள் ஒளவை. வழி யில் ஒரு ஆறு குறுக்கிட்டது. அந்த இடத்தில் எல்லோருமாக சிறிது நேரம் இளேப்பாறிவிட்டு, மீண்டும் பயணத்தை ஆரம்பிக் கும் போது-ஒரு வீரன் மற்ற வனைப் பார்த்துக் கிண்டலாகப் பேச ஆரம்பித்தான்! - 'ஏனப்பா மாரு உன் குதிரை மண் குதிரையல்லவே? மண் குதிரையாய் இருந்தால் அதை நம்பி ஆற்றில் இறங்கி விடாதே' என்று எச்சரித்தான். இவன் இப்படி கேலி பேசியது மாறனுக்கு ஆச்சரியமாக இருந் தது. நம் குதிரையாவது மண் குதிரையாவது? இது என்ன பழமொழி! மண்ணால் குதிரை செய்து அழகு பார்ப்பார்களே இலக்கியச்சித்தர் # தங்கவயல் ! # லோகிதாசன் # Z1.