பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதைப் புறமறிவதிலோ, அதன் தன்மைகளைக் கண்டுணர்வதிலோ அவர்கள் வலிமையற்றவர்களா கவே உள்ளனர். காதல் குருத்து விடாத பருவத்தில் பெண்டிர் இத குலேயே பேதை எனப்படுகின் றனர். இது பருவப்பேதமை, ஆட வர்க்குள்ள அறிவிலாப் பேதை மையன்று. இப் பருவத்திலே அவர்களேக் குடும்பமும் குடும்பச் சூழலும் பண்புகளுமே புற அா ணுக நின்று ஓரளவு காக்கின்றன. பருவம் வந்தபின் கூடக் காதலு னர்வு பெண்டிரிடம் உள்ளார்ந்த உணர்வாகவே நிற்றலால், குடும் பப் பெண்மையின் இயலார்ந்த பெண்மை அதாவது அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் நாற்குண இயல்பும், அதில் தமிழ் மரபில் மலர்ந்த கற்புஎன்னும் பண்புமே அக அரண்களாக அமைந்து பெண்டிர் காதலுக்குரிய காப்பு அளிக்கின்கிறன. பெண்டிர் பெண்மையுடனெத்த ஆடவர் பண்பே நிறை. ஆனல் இது ஆடவரிடம் பெண்மைபோல இயல்பாக மலர்வதில்லை, மலரும் போதும் பிற்பட்டே மலர்ச்சியுறு கிறது. அத்துடன் பெண்டிருக்குக் காதல் உயிர், கற்பு உரிமை. ஆட வருக்கே நிறை உயிரன்று, உரி மையுமன்று, கடமை. பேராண் மையோ, கடமை கூட அன்று, பண்புகூட அன்று, பண்பின் மேம் பட்ட சால்பு ஆகும். இயற்கை வழி நின்ற பேண்டிர் இயற்பண் பான பெண்மையும் காதலும் தவ குது நிற்பவை, தவறின், உடைந் தால் உருப்பட முடியாத ஒடு போல, கண்ணுடி போல எளிதில் ஆக்கம் பெறமுடியாத தாகின்றது. ஆ ன ல் ஆ ட வ ன் நிறை, பேராண்மை போன்ற திறங் களோ, துலேக்கோலின் மேல் நோக்குப் போல ஊசலாடியும் தடுநிலை காண்பவை. குறட்பா கூறும் ஆடவன் பண்பு பெண்டிரின் இயல்பான மென்மை களைப் பாதுகாக்கும் ஆடவரின் உயர் சால்பை வலியுறுத்துகிறது. தனிமையில் .ெ ச ல் லு ம் போது கண்ட பொற்கிழியை ஒருவன் எடுத்துக் கொள்ளல் எளிது, எண் ரும் குற்றம் காணமுடியாத செய லும் ஆகும். இந்த எளிய ஆதா யத்தைத் துறந்து அதை உரிய வரிடம் தேடிக் கொடுக்கும் ஒரு வனது ச மு த ய, அரசியல் பொறுப்புணர்ச்சி எவ்வாறு சரா சரி மனிதனுக்கு மேம்பட்ட சால்பு ஆகுமோ, அது போன்றது ஆட வன் எளிதில் செய்யத்தகும் தவறு: களேச் செய்யாது, குடிமைநிலை யில் நின்று பெண்மை காத்தல் ஆகும். . திருவள்ளுவர் ஆடவனுக்கு, கற்புடைப் பெண்டிரின் நிலையமா கிய குடும்பத்தில் பிறந்து வாழ்ந்து அம்மரபு பேணும் குடும்ப ஆடவ: னுக்கு, இந்தச் சால்பைச் சால்பு என்று கொள்ளாமல், அறம் என்றே கொண்டார். ஆகவே, தான் இதில் தவறுவதைக் தீமை: என்ருர், உறவு, நட்பு, பாசம் காரண மாகத் தன் குடும்பத்துடன் ஒட் டிய குடும்பம் போல அமைந்த பழகிய குடும்பங்களில் அக்குடும் பத் தலைவருடன் தலைவராகப் பழ. கும் ஆடவன் எளிதாக அவர் காப் பில் உள்ள பெண்களே நயவஞ்சக மாக ஏமாற்றி விட முடியும். இது ஆடவன் அ ற ப் பண்பு க் கு க் கேடான தீமை. ஏனெனில். இதில் உளத்தே நயவஞ்சகம், உறவியல் நம்பிக்கைக் கேடு; சமு தாய வாழ்விலே, அழிமதி. இத் தீமை தவிர்த்தாலோ, அவன். அறத்தின் அறமாகிய சால்புடைய, வன் ஆகிருன். அவள் கற்பின், மலர்ச்சியாகிய தாய்மைக்கு ஒப். பான சான்ருண்மைக்கு ஒப்பாம், தகுதியுடையவள் ஆகிருள். . . . شد 氹