கப்பல் ஒட்டிய தமிழர் வெள்ளேயன் இந்நாட்டை விட்டு விரட்டப்பட வேண்டுமானல், அவனுடைய ஆதிக்கத்தின் ஆணிவேரான வியாபாரத் துறையைத் தான் முதலில் கைப்பற்ற வேண்டுமென்ற ஒரு சிறந்த திட்டத்தை முதலில் வகுத்த பெருமை சிதம்பரனருக்கே உரியதாகும். 1906-ல் அவரால் ஆரம்பிக்கப்பட்ட சுதேசிக் கப்பல் கம்பெனி' இந்த சிறந்த நோக்கத்துடனேயே தொடங்கப்பட்டதாகும். என்ருலும் அவருடைய திட்டம் வெற்றிபெற முடியாதபடி அரசாங்கம் அவரை நாட்டை விட்டே துரத்திவிட்டது. தீவாந்திரத் தண்டனே கொடுக்கப்பட்டது. கடலில் கப்பலோட்ட முயன்ற ஒரு தமிழன் கடல் நடுவே கப்பல் போல மிதந்து கொண்டு இருக்கும் ஒரு தீவில் சிறை வைக்கப்பட்டார். ஆருண்டுகள் பொறுத்து வீரர் சிதம்பரனர் சிறையினின்று வெளியே வந்தபோது வறுமையென்னும் கொடிய பகைவனே அவரை வரவேற்றன். வறுமை அவரை ஆட்டிப் படைத்தது. அன்ருட வாழ்க்கையை நடத்துவதுகூட முடியாது போயிற்று. அவரை ஆதரித்த அன்பர்கள்’ எல்லோரும் கைவிட்டு விட்டனர், நாட்டின் விடுதலேக்காக ஒரு பெரிய அரசாங்கத்தோடு போராடிய சிதம்பரஞர் கடைசியாக வறுமையோடு போராடி அதில் வெற்றி பெற முடியாமல் 1936-ல் உயிர்நீத்தார். எந்தக் காரியத்தைச் செய்ய வேண்டுமென்று அவர் அன்று பாடுபட்டாரோ, அந்தக் காரியம் இன்று வெற்றி பெற்றுவிட்டது. 43 ஆண்டுகளுக்கு முன் ஒட்ட வேண்டுமென்று அவர் நினேத்த கப்பல் இன்று ஒடுகிறது. இது அவருடைய கனவை நினேவாக்கும் ஒரு நற்செய்தியாகும். தமிழ் மக்களுக்கு அவர் உண்டாக்கித் தந்த பெருமையாகும். பண்டைக் காலத்தில் கப்பலோட்டிப் புகழ்பெற்ற தமிழர்களின் சிறந்த பண்பை, வ. உ. சிதம்பரம்' என்ற கப்பல் திலேநாட்டிவிட்டது. -பேரறிஞர் அண்ணு, 13-2-49.
பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/77
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை