பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆஇந்ாழி சிந்திப்போம். தமிழ். இந்த மூன்று எழுத்துக்களைக் கொண்ட சொல்லேச் சொல்லும் உள்ளமெல்லாம் போது என் :பூரிப்பு நிறைகின்றது. இந்த மூன்றெழுத்துச் சொல்லிலே காணும் நிறைவை நான் வேறு எதிலும் காணவில்லை. தமிழ் வழங்கும் நிலத்திலே ஒரு தமிழனகப் பிறந்த நான் பெற்றுள்ள பேறு எத்தகைய பேறு என்று நினைக்கும்போது என்னுள் ஏற்படும் இன்பத்தை நான் அளவிட்டு உரைக்க முடி யாது. தமிழனாகப் பிறந்தேன்-தமி தழால் வளர்ந்தேன்-தமிழில்ை பெருமைக் குரியவகை சிறந் தேன்-தமிழ் காரணமாக நான் உயர்ந்தேன்!-தமிழே எனக்கு ..வாழ்வும் வளமும், சீரும் சிறப்பும் மாண்பும் மதிப்பும் அளிக்கிறது. என்பதை நான் மறக்க முடியுமா? மறைக்க முடியுமா? அல்லது மறுக்கத்தான் முடியுமா? தமிழ் என்று நினைக்கும்போது -என்சீனப் போலவே, தமிழைத் தாய்மொழியாகப் .ெ ப ற் று ப் பயின்று சிறந்து வாழ்ந்த என் தமிழ் மூதாதையரின் ஏற்றத்தை .யும் ஊட்டத்தையும் எண்ணும் போது துள்ளுகின்ற உள்ளம் என்னே இன்பப் பண்பாடச் செய்கிறது. என்னைப் போலவேதான் எல் அலசத் தமிழர்களும் பெருமையடை இனப் பழித்துரைக்க வார்கள்-என்னைப் போலவே தான் எல்லாத் தமிழர்களும் இன்ப முறுவார்கள்-என்னைப் போலவே தான் எல்லாத் தமிழர்களும் இசை பாடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். என் இன்பம் தனி இன்பமன்று; கூட்டின்பம் என்று நான் நினைக்கிறேன். என் பெருமை தனிப்பெருமையன்றுதமிழர் சமுதாயத்தின் பொதுப் பெருமை என்று நான் கருதுகின் றேன். என் சிறப்பு தனிச் சிறப் பன்று-எல்லாத் தமிழர்களுக்கும் உண்டான பொதுச் சிறப்பு என்று நான் நினேக்கிறேன். நான் நினைத்தது சரிதான? சற்று நிமிர்ந்து பார்க்கிறேன். எதிரிலே ஒருவன் வருகிறன், அவன் என்னைப்பார்த்து, மொழி வெறியன்' என்று கூறுகிறன். உள்ளம் துணுக்கென்கிறது. உடல் பதறுகிறது. சுட்டுப் பொசுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அவனே உற்றுப் பார்க்கிறேன். அவன் யார்? தெலுங்கன? மலேயாளியா? இல்லே. ஆந்திர தேசத்தறிஞனும், மலே யாள நாட்டு மேதையும் தத்தம் தாய்மொழிக்குத் தலைமொழிஎன்று கூறித் தமிழைப் போற்றிப் பாடு வோராயிற்றே-அவர்களா என் முற்படுவார் கள்? வங்காளத்தான? மராட்டியன? வேறு வடமாநிலத்தவன? 76