தமிழரிடையே விழிப்புணர்ச்சி ஏற்பட்டது, தமிழ்ப் பகைவர்கள் 'தமிழிலே பாட்டுக் கிடையாது’ என்ருர் கள். தேவாரமும், திவ்வியப்பிர பந்தமும், பள்ளுகளும் குறவஞ்சி களும் இருக்கும் போதே - தமி ழிலே இசைப்பாட்டுக் கிடையாது என்ருர்கள் மு ற் று ங் கற்று ஆராய்ந்த பெரும் புலவர்கள் போலே. ※ தமிழர்கள் எழுச்சி பெறும் ஒவ்வொரு நேரத்திலும் தமிழ்ப் பகைவர்கள் உடனடியாக எழுப்பு கின்ற கேள்வி 'தமிழிலே என்ன இருக்கிறது ?’’ என்பதுதான் ! த மிழ் நா ட் டி .ே ல யிருந்து கொண்டு தமிழ்ச் சோற்றையுண்டு கொண் டு, தமிழ் பேசிக் கொண்டு 'தமிழிலே என்ன இருக்கிறது ?" என்று கேள்வி கேட்கும் ஒரு கூட்டத்தைத் தமிழ்ப் பெருங்குடி பார்த்துக் கொண்டிருக்கிறதே அது போதும் தமிழ்ப் பகை அஞ்சாமல் வளர் வதற்கு;அதுபோதும் அது மேலும் மேலும் தமிழெதிர்ப்புச் சூழ்ந்து வாழவதறகு. - தமிழிலே இசையில்லையா ? என்ற கேள்வி தமிழரிடையே ★ எழுந்தது. மூலே முடுக்குகளிலே, ஏட்டுச் சுவடிகளிலே இருந்த இசை நூல்களெல்லாம் வெளி வந்தன. அது மட்டுமன்று ஆர்வ முள்ள கவிஞரெல்லாம் புதிய இசை நூல்களேயாக்கிப் படைத் தார்கள். இசை இலக்கணங்கள் இசை நுணுக்கங்கள் பழந்தமிழ் இசைக் கருவிகளின் ஆராய்ச்சி கள் எத்தனே எத்தனை என்று எண்ணிக் கணக்கிட முடியாத அளவு இசை நூல்கள் எழுந்தன. இத்தனையும் கண்ட பிறகும் இன்றும், தமிழிலே என்ன இருக் கிறது என்று கேட்டுக் கொண் டும் - இசை மொழி கடந்தது என்று கூறிக் கொண்டும் சிலர் இருக்கிருர்கள். அவர்கள் எதிர் பார்ப்பதெல்லாம் மேலும் மேலும் தமிழர்களே அறியாமைக் குழியில் வீழ்த்திக் கொண்டிருக்க வேண் டும் என்பதேயில்லாமல் வேறு: என்னவாயிருக்க முடியும். - தமிழ்ப் பகைவர்களின் இடை யிடாத நாசவேலைக்கு எடுத்துக் காட்டாக தமிழிசை வளர்ந்த அடிப்படையை ஒருவாருக எடுத் துக் காட்டினேன். இனி மற்ருேர் எடுத்துக் காட் டும் தருவேன். . (தொடரும்); ★ நன்றும் தீதாகிவிடும் பெருஞ்சாலையில் இரண்டு புேர் இரைக்க இரைக்க ஓடிவந்தார்கள். நிறுத்துமிடத்தை_அணுகுவதற்குள் பேருந்து புறப்பட்டு விட்டது: இரக்கப்பட்ட ஒட்டுநர் இடை வழியில் நிறுத்தி அவர்களை ஏற்றிக் கொண்டார். 'ஒட்டுநர் நல்லவராயிருக்கிருர், உதவி செய்யும் மனப்பான்டிை விருக்கிறது” என்று பாராட்டினர் பயணிகளில் ஒருவர். . * அட போப்பா ! யாரோ சொந்தக்காரர்கள் போலிருக்கிறது. இல்லாவிட்டால் நிறுத்தி ஏற்றிக் கொண்டிருக்கமாட்டார்' என்ருர் வேருெருவர். 80
பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/82
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை