பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாய்த் தெய்வம் முன்னொரு காலத்தில் தேவநாதன் என்று ஒரு வணிகன் இருந்தான். அவன் ஒரு நாயை வளர்த்து வந்தான். அந்த நாய்க்கு அவன் வேளை தவறாமல் உணவு வைப்பான்; நாள்தோறும் குளிப்பாட்டுவான், ஓய்வு நேரத்தில் அதனுடன் விளையாடுவான்; இவ் வாறு அன்புடன் அதை வளர்த்து வந்தான். அந்த நாயும் அவனிடம் மிகுந்த அன்பு வைத்திருந்தது. அவன் செல்லும் இடமெல்லாம் கூடவே சென்றது. அவனுக்குப் பல சிறு வேலைகள் செய்து உதவிபுரிந்து வந்தது. ஒரு நாள் தேவநாதன் வாணிக வேலையாக வெளியூர் ஒன்றுக்குப் புறப்பட்டுச் சென்றான், வழக் கம் போல அவன் நாயும் கூடவே சென்றது. போகும் வழியில் களைப்பாறுவதற்காக நன்றாகப் புல்வளர்ந்திருந்த ஓர் இடத்தில் தேவநாதன் படுத் தான். படுத்தவன் அப்படியே தூங்கிப் போய்விட் டான். அந்த நாயும் அவன் பக்கத்திலேயே படுத்துக் கிடந்தது. திடீரென்று புகைநாற்றம் மூக்கைத் துளைத்தது. நாய் கண்விழித்துப் பார்த்தது. மிக அருகாமையில் காட்டு மரங்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தன. நாய் தேவநாதன் ஆடையைப் பற்றி இழுத்தது. நன்றாக உறங்கிக் கொண்டிருந்த தேவநாதன கண் விழிக்கவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் நாய் திகைத் தது. சிறிது தூரத்தில் ஒரு குளம் இருப்பது தெரிந் 84