பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தது. அதைக் கண்டவுடன் நாய் பாய்ந்தோடிச் சென்றது. அந்தக் குளத்திற்குள் இறங்கியது. உடல் முழுவதும் நனையும்படி தண்ணீரில் மூழ்கியது. பிறகு எழுந்து தேவநாதன் படுத்திருக்குமிடத்திற்கு ஓடிவந் தது. அவன் அருகில் இருந்த புல் தரையில் புரண் டது. இவ்வாறு குளத்தில் மூழ்கி மூழ்கி எழுந்து வந்து அவன் படுத்திருந்த இடத்தைச் சுற்றிலும் இருந்த புல்தரை முழுவதையும் ஈரமாக்கிக் கொண்டே யிருந்தது. நேரம் ஆக ஆக அது குளத்திற்குப் போகும் வழியில் இருந்த மரங்களிலும் தீப்பற்றிக் கொண்டது. அப்போதும் நாய் கெருப்பினு டே புகுந்து பாய்க் தோடியது. தண்ணிரைத் தன் உடலில் நனைத்துக் கொண்டு ஓடிவந்து, புல்தரையை ஈரமாக்கியது. இடைவிடாமல் அது தன் வே லை ைய ச் செய்து கொண்டே இருந்தது. - காட்டில் எரியும் நெருப்பு, தன் தலைவனை நெருங்க விடாமல் செய்வதில் அது கண்ணும் கருத்துமாக இருந்தது. தன் உடலில் உயிருள்ள வரையில் அது தன் கடமையை விடாமல் செய்தது. நெடுநேரம் கழித்துத் தேவநாதன் கலந்து கண்விழித்துப் பார்த்தான்.