பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்ளப் பார்வையும் குறுகுறு நகையும்-அந்தக் கண்ணனின் கவர்ச்சிச் சொத்துக ளென்பார் உள்ளங் கொள்ளைகொள் செந்தமிழ் உரையும் - -நெஞ்சில் உண்மையும் எங்கள் அண்ணனின் சொத்தாம்! அண்ணனே எங்கள் கண்ணன் என்பேன்! மாயமோ சித்தோ மக்களைக் கவர்ந்தார்-திரு வாயினற் றமிழால் ஆட்சியுங் கவர்ந்தார் காயமோ போரோ விளைந்திடாமலே-அரி யணையிலே தமிழை அமர்ந்திடச் செய்தார். அண்ணனே எங்கள் கண்ணன் என்பேன்! அன்பு வழியிலே அடக்கத் துடனே-மிக அமைதி யாய்ப்பணி செய்திடும் படிக்கே தன்பின் இன்பத் தமிழகம் காக்கத் தம்பியர் படையைத் தந்தவ ரன்ருே அண்ணனே எங்கள் கண்ணன் என்பேன்! ஆகுலம் காத்தான் அந்தநாள் கண்ணன்-எங்கள் அன்னை நாடிதனைக் காத்தார் அண்ணன் மாகுலங் தமிழினம் வாழ்ந்திட வே தன்-வாழ் நாளெலாம் உழைத்த நல்லவர் அண்ணன். அண்ணனே எங்கள் கண்ணன் என்பேன்! நாரா நாச்சியப்பன்