இது ஒர் உண்மை நிகழ்ச்சி. சில ஆண்டுகளுக்கு முன் செய்தி இதழ்களிலே வந்த ஒரு நிகழ்ச்சிக்குக் கவிதை வடிவங் கொடுத்திருக்கிறேன். ஊரும் பெயர்களுமே, மாறியுள. -ஆசிரியர். காத்திருந்தாள் காத்திருந்தான் சோலையிலே தென்றல் வரக்கண்டு தேன்கொண்ட பூவினங்கள் நின்று தலையாட்டி நீண்டசுகம் கண்டிருக்கும்; வண்டுவந்து கூடி மகரயாழ் மீட்டி நின்று கொண்ட நலம்பாடிக் கொண்டிருக்கும்; பக்கத்து நின்று வளர்ந்துகனி நீட்டும் மரங்களிலே சென்றிருந்து பச்சைக் கிளிகள் பழம்பருப்புத் தின்று பறந்திருக்கத் தேனை நல்லிசையை வென்று குயில்பாடும் வேளை யொரு சோலேயிலே அந்திப்பொழுதுமணி ஐந்துக்(கு) அமுதவுல்லி குந்தி யிருந்தாள், குறுகுறுக்கும் நெஞ்சுடனே! நாடோறும் எப்படியோ நானும் பறந்துவந்தே ஏடுகொண்டு மெல்லமெல்ல இங்குவரும் காதலரைத் தேடிவழி பார்த்திருப்பேன்; செல்லத் துரையவரோ ஓடிவரக் கண்டதில்லை; ஒர்நாளும் முந்திவரக் கண்டதில்லை; நானேதான் காத்திருக்க நேர்ந்ததுவே கண்டுவிட வேண்டுமவர் காதல்உளம் கொண்டவரா என்பதனை என்றே எழுந்தங்கே நின்றசெடிப் பின்போய் ஒளிந்திருந்தாள்; பெண்ணுள் அமுதவல்லி! 94
பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/96
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை