பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டான்! அவளுந்தான் கண்டாள் இணையிரண்டு கண்களுமே ஒன்ருய்க் கலந்திருந்த காட்சியிலே மண்ணுலக மில்லை; மலர்க்கொடிகள் தாமில்லை; எண்ணக் கவலைகள் ஏதுமில்லை; சுற்றத் தடையில்லை; பெற்றேர் தருங்கொடுமை இல்லை; இடைவெளியைத் தாண்டி இணையும் விழிகளுடன் ஒன்ருய்க் கலந்திருந்த உள்ளம் தவிர்த்தங்கே நின்று நிலைத்ததொன்று நீள்புவியை வாழவைக்கும் காதல் அதுவே! களிக்கும் நிலையதுவே! மோதும் இரண்டுளங்கள் முட்டப் பிறக்குமொளி! சேரும் இரண்டுளங்கள் சிந்துகின்ற முத்தமது! கூடும் இரண்டுயிர்கள் கொட்டும் வயிரமது! கட்டுண்ணும் ஈருயிர்கள் காணுகின்ற தேனமுதம்! விட்டுப் பிரியாதார் மேவுகின்ற பேரின்பம்! காதல் அதுவே! களிக்கும் நிலையதுவே! மாதமுத வல்லி மணியன் இருவருமே நின்ருர் நெடுநேரம் வேறு நினைப்பின்றி குன்றனய தோளானேக் கோபித்துக் கேட்டுவிட எண்ணி யிருந்ததெலாம் ஏந்திழையாள் தான்மறந்தாள் கண்ணுக்குக் கண்னை காதலனைக் கண்டுவிட்டால் பேசிக் களிப்பதல்லால் ஏசிப் பிரிவதுண்டோ? வாசிக்கும் புத்தகத்தை வாங்கி நெருப்பினிலே போட்டுக் கொளுத்துவதோ? பூவெடுத்துக் கொண்டையிலே சூட்டாமல் கல்லின்மேல் தூவிக் கெடுப்பதுவோ? குந்திக் குரலெடுத்துக் கூட்டமுதப் பாட்டிசையைச் சந்தப் படிபாடித் தண்டமிழின் இன்பத்தைக் கானமல் கத்திக் கசப்படையச் செய்வதுவோ? ஆணழக ைேடன்பால் ஆசைக் கதைபேசி வாழ்வின்பம் காணுமல், வந்தவனத் தான்சினந்து பாழ்படுத்த லாமோ? பதைக்கப் புரிவதுவோ? இவ்வாறு வேறு நினைப் பேதும் மறந்தவராய்க் கவ்வும் இனேக்கண்ணில் காதல் ஒளிபெருக்கி நின்றிருந்த போது நிலவும் அமைதியினைக் . கொன்றந்தச் சேயிழையாள் கூறத் தொடங்கிள்ை. சிந்தித்தாள் தெரிவித்தாள் அத்தான்! மணியத்தான்! அன்பான என்னத்தான்! எத்தனைநாள் நாமும் இருந்திடுவோ மிவ்வாறே! கூடிச் சிரித்திருப்போம் கொஞ்சம் இருட்டிவிட்டால் வாடிப் பிரிந்திடுவோம், வாழ்க்க்ை தொடங்கவில்லை இே