இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
எத்தனைநாள் அத்தான் இனிப்பொறுக்க மாட்டேன்தான் சித்தந் துடித்தந்தச் சேயிழையாள் சொன்னதற்கே - அன்புடையாய் என்றன் அமுதவல்லிப் பெண்ணே நாம் இன்பத் திருமணத்தை ஏற்றுக் குடித்தனத்தைச் செய்யத் துடிக்கின்ருய் செந்தா மரைமுகத்தாய் மெய்யாய் உரைக்கின்றேன், மேற்படிப்புத் தேர்வினிலே வெற்றியுற்ற பின்னே விழைகின்றேன் இல்லறத்தைப் பற்றுவிட்டேன் என்று பதைக்காதே! உன்னே அடையத் துடித்தாலும் என்றன் அறிவால் மடைப்பெருக்காம் அன்பை மறைத்துவைத்து வாழ்கின்றேன்! கல்வி முடிந்தவுடன் கட்டழகி தோள்களிலே நல்ல மலர்மாலே நாடும் மணமாலே