பக்கம்:இளந்தமிழா.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிருதிவிராஜ்-சம்யுக்தை

பிருதிவிராஜ் சம்யுக்தையைக் காதலித்தான். ஆனால் பகைமை கொண்டிருந்த ஜயசந்திரன் தன் மகளை அவனுக்குக் கொடுக்க மறுத்ததோடு அவளை வேறொருவனுக்கு மணம் செய்யத் திட்டமிட்டு சுயம்வரத்திற்கும் ஏற்பாடு செய்து விட்டான். சுயம்வர நாளன்று பிருதிவிராஜ் சம்யுக்தையைத் துாக்கிச் சென்ற துணிச்சலான வரலாறு அனைவரும் அறிந்ததே. அதுவே பாடலாக இங்கு உருவாகிறது.

மங்கை சுயம்வர நாளிது;
வந்தனர் மன்னர் பல்லாயிரம்
அங்கையில் மாலையை ஏந்தியே
அவையில்சம் யுக்தையும் போந்தனள்.

ஆரங் கரங்கொண்ட ஆரம்போல்
அசைந்து நடக்கிறாள் கூட்டத்தில்
ஆரங் கவள்முகம் நோக்கிடார்?
ஆர்முக மும்அவள் நோக்கிலள்.

பிருதிவி ராஜனுக் கோலைதான்
போக்க மறுத்ததோ டாங்கவன்
உருவச் சிலையொன்று செய்துமே
ஒள்ளணி வாயிலைக் காத்திடும்.

சேவகன் போலவே வைத்தனன்
தெளிவில் ஜயசந்த்ர ராஜனே;
பூவைதன் காதலற் கத்தனும்
புன்மை புரிந்ததைக் கண்டனள்.

121

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/123&oldid=1460169" இலிருந்து மீள்விக்கப்பட்டது