பக்கம்:இளந்தமிழா.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குரல்

அகல்வானில் பறந்திடுவேன்
ஆழினியில் மூழ்கிடுவேன்
புகவொன்னா இடமெனநான்
புதைந்தாலும் அவ்விடத்தும்

எங்கிருந்தோ குரல்கேட்கும்
இதயவுணர் வெழத்தட்டும்

சோர்ந்துடலம் தளர்வெய்திச்
சுகமெல்லாம் கனவெனவே
ஒர்ந்துன்னைக் கூவிடுவேன்
ஒருகணந்தான் என்றாலும்

எங்கிருந்தோ குரல்கேட்கும்
என்துயர்க்கே துாபமிடும்

என்றுமுன்றன் நாமவிளக்
கிதயமலர் ஏற்றிவைத்து
அன்றுமின்றும் கேட்டதெல்லாம்
ஆர்குரலென் றுணரும்வரை

எங்கிருந்தோ குரல்கேட்கும்
எச்சரிக்கும் அதன்மேலும்

எங்கிருந்தோ குரலில்லை
இங்ககத்துள் எனத்தெளிந்து
எங்ஙனுமே குரல்கேட்கும்
இன்பநிலை எய்தும்வரை

எங்கிருந்தோ குரல்கேட்கும்
ஏற்றமெலாம் பெறவுதவும்

127

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/129&oldid=1460174" இலிருந்து மீள்விக்கப்பட்டது