பக்கம்:இளந்தமிழா.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 கருக்கரிவாள்

கருக் கரிவாள் கைக் கொண்டே

 கழனி செலும் இள நங்காய்!

அறுத்து விட்டாய் என் உள்ளத்தை

 அஞ்சனக் கண் வாளாலே;

கவடில்லா நேர் நோக்கால்

 கனல் பாய்ச்சும் பெண் மானே,

உவமை ஒன்றுமில்லாத

 உயர்வனப் பைங்கிளியே.

பூச் சூடியகொண்டை

 புலன் ஐந்துந் தான் மயக்கப்

பாச்சான் கொடி இலைபோல்

  பசுமை கொண்ட நல்லாடைக்

கற்றைக் கொசுவமது

 கலைந்தே சரிந்தாட,

ஒற்றை வடச் செம்பவளம்

  உவந்தேறி ஆடிவரும்

அங்கி தனைக் கண்டறியா

அங்கலசம் சிறிதசையப் பொங்கிவரும் இயய் அழகுப்
புன்னகையாய் போகின்றாய்...
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/41&oldid=1360058" இலிருந்து மீள்விக்கப்பட்டது