பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் எங்கே ! 99 தாமே : என்ன, போலீசிலா? லலிதா : நீங்கள் வந்து எடுத்துக்கொள்ளா விட்டால் வேறு என்ன வழி? இங்கே உங்களோடு இன்னும் பேசிக்கொண்டிருக்க எனக்கு இஷ்டமில்லை. நான் போகிறேன். தாமோ : உங்களோடேயே வந்து பெட்டிகளை எடுத்து வந்துவிடட்டுமா? உங்கள் காரில்...நான்...நான்... லலிதா : என்னேடு நீங்கள் வரக்கூடாது. வேண்டுமானல் வேறு டாக்ஸி வைத்துக்கொண்டு பின்னலேயே வரலாம். (வேகமாகப் புறப்படுகிருள்.) தாமோ : அடே. இவளென்ன திடீரென்று இப்படிப் பேச ஆரம்பித்துவிட்டாளே? இவளைப் புரிந்து கொள்ளவே முடியவில்லையே? அதுதான்போகட்டும். போலீஸ் ஸ்டேஷனுக்குப் பெட்டிகளை அனுப்பி விடுவாளாம்? அது வேறு தொந்தரவாச் சே...ஆளுல். நல்லவேளை... இன்னும் ஒரு மணிக்குள்ளே போய் எடுத்துவர முடியாதா என்ன? Iஅவசரமாகப் புறப்படுகிருன்.) காட்சி நான்கு (லலிதாவின் இல்லம். சதாசிவம் அமர்ந்திருக்கிரு.ர். போலீஸ் இன்ஸ்பெக்டர் நுழைகிருர் 1 இன்ஸ்பெக்டர் : மிஸ்டர் சதாசிவம் நீங்கள்தான? சதாசிவம்: ஆமாம்... வாருங்கள், என்ன விஷயம்? இன்ஸ்பெக்டர் : இந்த நேரத்தில் உங்களுக்குத் தொந் தரவு கொடுக்கிறதுக்காக மன்னிக்கவேனும் கள்ளச்