பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குற்றவாளி 11 வாசு : சும்மா சொல்லுங்கள்-என் மனைவி இருப்பதால் பரவாயில்லை. ராகவன் : இல்லை-இது தனிப்படப் பேசவேண்டிய விஷயம். வாசு சரி, மாலதி-நீ போய் உடையை மாற்றிக் கொண்டு புறப்படத் தயாராக வா. நான் அதற்குள் இவரோடு...... மாலதி : இதோ ஐந்து நிமிஷத்திலே நான் வந்து விடுகிறேன். [ம்ாலதி உள்ளே போகிருள் 1 வாசு : என்ன விஷயம் சொல்லுங்கள் -நீங்கள் யார் ? இந்த் நாற்காலியில் உட்காருங்கள். ராகவன் (உட்காராமல்) : சரோஜினி உங்களுக்குத் தெரியுமல்லவா ?-அவள் இறந்து போனுள். வாசு (திடுக்கிட்டு) . சரோஜினியா ? நீங்கள் சொல்லு வதை நம்ப முடியவில்லையே ? ராகவன் : நம்ப முடியாத செய்திதான்-கொஞ்ச நேரத் திற்கு முன்புதான் அவள் இறந்தாள்-யாரோ கொலை செய்திருக்கிரு.ர்கள். வாசு (மேலும் திடுக்கிட்டு) : கொலையா ? கொஞ்ச நேரத்திற்கு முன்னுலா ? ராகவன் (நிதானமாக) . ஆமாம், கொலேதான்-கைத் துப்பாக்கியால் யாரோ சுட்டுக் கொன்றிருக் கிருர்கள். வாசு : சுட்டா கொன்றிருக்கிரு.ர்கள்? அவளுக்கு அப்படி யார் விரோதிகள் ?