பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளந்துறவி 137 லக்ஷ்மி : நீங்கள் பாடச் சொன்னல் அவள் கட்டாயம் பாடுவாள். சுப்பிர : அதெப்படி உனக்குத் தெரியும் ? லக்ஷ்மி : நீங்கள் பல பேருக்கு உபதேசம் செய்கிறீர்கள் அல்லவா ? அவற்றையெல்லாம் சொல்லும்படி அவள் என்னைக் கேட்பாள். சுப்பிர : அப்படியா ? லக்ஷ்மி : நீங்கள்தான் அவள் தெய்வம் என்று சொல்லு கிருள். சுப்பிர : அப்படியானல் அவளுக்காக என் விரதத்தைக் கூட விட்டு விடலாமென்று தோன்றுகிறது. லக்ஷ்மி : சுவாமி, உங்கள் விரதத்திற்குப் பங்கம் வரும்படி நான் செய்துவிட்டால் பிறகு அக்காள் என்னிடம் பேசவே மாட்டாள். சுப்பிர : அப்படியெல்லாம் செய்ய மாட்டாள். லக்ஷ்மி ஏன் செய்ய மாட்டாள் ? அவள் ரொம்பப் பிடிவாதக்காரி. உங்கள் இஷ்டத்திற்கு விரோதமாக அப்பா ஏதாவது செய்து விட்டாலும் அவள் கட்டாயம் கோபித்துக் கொள்வாள். நீங்கள்தான் அவளுக்கு எல்லாம். நேற்று நீங்கள் ஆற்றுக்குப் போகும்போது உங்கள் பாதங்களில் வைப்பதாகப் பாவித்துக்கொண்டு அவள் இரண்டு ரோஜா மலர் களை இரண்டு கையாலும் முன்னல் வைத்துவிட்டு உங்களைப் பார்த்துக் கும்பிட்டுக் கொண்டிருந்தாள். சுப்பிர : லகi:மி.அந்தப் பட்சணம்..... tف...... அது வேண் டாம். சும்மா வேடிக்கையாகச் சொன்னேன், அதோ, ராமநாதன் வருகிருன்,