146 இளந்துறவி சுப்பிர நீ அருகில் இருந்தால் எத்தனை பாட்டுக்கள் எழுதுவேன் தெரியுமா ? எனக்குப் பாட்டெழுத உற்சாகம் கொடுப்பதெல்லாம் இப்பொழுது நீதான் d#LGGDfT. கமலா : சுவாமி, கடவுள் பக்தியால் பரவசப்பட் டல்லவா. தாங்கள் பாடுகிறீர்கள் ? சுப்பிர முதலில் அப்படித்தான் பாடினேன். ஆனால், இன்று எனக்கு உயிர்த் துடிப்பாக உள்ளதெல்லாம் நீதான். கமலா (திடுக்கிட்டு) : சுவாமி, இதென்ன ? சுப்பிர : கமலா, உன்னே இதுவரை நேரில் கண்டதுகூட இல்லை. உனது இனிய இசையின்மூலம் உன்னை நான் கண்டேன். உனது அழகிய தாமரை போன்ற முகத்தை இன்று கண்டு களிக்கிறேன். இவ்வளவு சிறு வயதிலேயே நீ உலக வாழ்வை இழந்து கைம்மை பூண்டு நைந்துவிடக் கூடாது என்பது என்னுடைய ஆசை. கமலா : சுவாமி, நீங்கள் சொல்லுவதை என்னல் தெளி வாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. முன் ஜன் மத்தில் செய்த தீவினைகளின் பயனை இன்று நான் அனுபவிக்கிறேன். என்னுடைய வாழ்வைப்பற்றித் துறவு பூண்ட நீங்கள் கவ்லை கொள்ளக்கூடாது. சுப்பிர : நான் உனது வாழ்க்கையை எனது வாழ்க்கை யோடு பிணைத்து ஒன்ருக்க நிச்சயித்திருக்கிறேன். யாருக்கும் பயனற்ற இந்தத் துறவு எனக்கு இனி வேண்டாம். எனக்கு வேண்டியது உன்னைப்போன்று ஒரு களங்கமற்ற, ஆனால், சோகம் நிறைந்துள்ள
பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/148
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/27/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF_%28%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%29.pdf/page148-764px-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF_%28%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%29.pdf.jpg)