பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளந்துறவி 147 ஒரு பெண்மணியின் வாழ்க்கைக்கு இன்பமும் சாந்தியும் தரக்கூடுமானல் அதுவே எனக்கும் சாந்தி அளிக்கும். கமலா : என்ன, எனது குருநாதராகிய தாங்களா இப்படிப் பேசுகிறீர்கள் ? சுப்பிர : கமலா, உன்னைக் காணுமலே காதல் கொண் டேன். உனது விதவைக் கோலத்தை மாற்றுவதை விட இத்தத் துறவு எனக்குப் பெரிதல்ல. நீயும் என் மேல் அன்பு கொண்டிருக்கிருய் என்பதை நான் அறிவேன். கமலா : நீங்கள் ஏதோ கனவுலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறீர்கள், சுவாமி. உங்களைப்பற்றி எவ்வளவோ உயர்வாக நான் எண்ணிக்கொண் டிருக்கிறேன். - அந்த எண்ணத்தை எல்லாம் மாற்றி விடாதீர்கள். நீங்கள் பேசுவதின் மர்மம் தெரிய வில்லையே. சுப்பிர : கமலா, உனக்கு என்மீது ஆசையில்லையா? நான் இவ்வழியாகப் போகும்போதெல்லாம் அழகாகப் பாடிக்கொண்டிருப்பாயே ? எனக்காகத்தானே அப் படிப் பாடுவது ? கமலா : சுவாமி, நீங்கள் இம்மாதிரியெல்லாம் பேசக் கூடாது. உங்கள் பாட்டைக் கற்பதற்கு முன்னல் என் உள்ளத்திலே எத்தனையோ சஞ்சலங்கள், உலக ஆசைகள் இருந்தன. ஆனல், இன்று நான் புதிய உயிர் பெற்றவள். உங்கள் பாட்டே அதற்குக் காரணம். எனது வாழ்க்கை புனிதம் அடையவும் அதிலே கடவுள் பக்தியென்ற இன்பத் தேன் ஊறி என் மனம் சாந்தி பெறவும் அருள் செய்த உங்களை என் குருநாதராக ஏற்றுக்கொண்டிருக்கிறேன்.