பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 குற்றவாளி இல்லை. அவர் போய்விட்டார். இனி அவரைப் பார்க்க முடியாது. மாலதி (ஆவலோடு): இல்லை; அவர் இங்கே வருவதாகச் சொல்லிவிட்டுப் போளுர், சரோஜினி (ஆச்சரியத்தோடு) : அப்படியா? அப்படி யானுல் நான் இங்கு வந்த விஷயத்தை அவருக்குச் சொல்லாதீர்கள். நான் உடனே போய்விடுகிறேன். அவர் வந்ததும் எப்படியாவது அவரைச் சமாதானப் படுத்துங்கள். வாசு என்னுல் இயன்றதையெல்லாம் செய்கிறேன். இந்த விஷயத்திலே கலந்துகொள்ள முதலில் எனக்கு இஷ்டமில்லையென்ருலும் இனிமேல் கலந்து கொள் ளாமல் இருக்க முடியாது. சரோஜினி . அவரோடு,நான் சேர்ந்து வாழ நீங்கள்தான் எப்படியாவது உதவி செய்ய வேணும். மாலதி : நானும் என்னலானதைச் செய்கிறேன். நீங்கள் கவலைப்பட வேண்டாம். சரோஜினி : சரி, நான் வருகிறேன். உங்கள் இரண்டு பேரையுமே நம்பிப் போகிறேன். நான் இங்கு வந்ததை அவரிடம் சொல்லாதீர்கள். வாசு : இப்பொழுது எங்கே போகிறீர்? சரோஜினி : என் வீட்டிற்குத்தான் போகிறேன். வாசு சரி, ஜாக்கிரதையாகப் போய்ச் சேருங்கள். ராகவன் வந்தால் நான் பார்த்துக் கொள்கிறேன். |சரோஜினி போகிருள்.) மர்லதி : இதென்ன ஆச்சரியமாக இருக்கிறதே...அந்த மனிதன் சொன்னதெல்லாம் பொய்யா?