பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குற்றவாளி 23 வாசு (சந்தேகத்தோடு) ; இதில் என்னவோ பெரிய சூழ்ச்சி இருக்கிறது. மாலதி : இனி எந்தச் சூழ்ச்சியும் நம்மை ஒன்றும் செய் யாது...அப்பா, நான் பயந்தே போனேன். வாசு : பயந்தது மட்டுமா? அதோடு என் மேல் உனக்கு எத்தனை சந்தேகம்? மாலதி : நான் சந்தேகப்பட்டது தப்புத்தான், என்னை மன்னித்துவிடுங்கள். வாசு: இந்தப் பெண்களுக்கு இத்தனை சந்தேகம் கூடாது. ஒரே நிமிஷத்திலே என்னைப் பெரிய பெரிய குற்ற வாளியாக்கி விட்டாயே. மாலதி : ஆண்களுக்கு மட்டும் இப்படி சந்தேகம் வராதா? அன்பிருந்தால் எல்லாம் வரும், அன்பு அதிகமானல் சந்தேகமும் அதிகம். வாசு : அந்த ராகவனும் இப்படி அன்பினுல்தான் சந்தேகப்பட்டு அலைகிருளுே? (சோமசுந்தரம் வருகிருன். அவனுக்கு ஏறக்குறைய வாசுதேவன் வயதே இருக்கும். இளம் வயதி லிருந்து அவர்கள் நெருங்கிய நண்பர்கள்.) சோமு : என்ன வாசு, பெரிய ஆராய்ச்சியிலே ஈடுபட் டிருக்கிறீர்கள் போலிருக்கிறதே? வெளிக்கதவு திறந்து கிடப்பதைக்கூட யாரும் கவனிக்கவில்லை. வாசு : அடடே, நீ வந்ததைக்கூட நாங்கள் கவனிக்க வில்லை. சோமு : என்ன அப்படி விசேஷம்?