பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 குற்றவாளி மாலதி உங்கள் நண்பர் ஒருத்தியைச் சுட்டுக் கொன்று விட்டாராம். அதைப்பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது அவள் இங்கே உயிரோடு வந்து நின்ருள். சோமு (சிரித்துக்கொண்டே): இதென்னடா வேடிக்கை? ஏண்டா வாசு, ஏதாவது களுக்கண்டாயா? வாசு : இல்லடா, அந்த சரோஜினிக்கு உதவி செய்யப் போய் பெரிய விபரீதம் வந்து சேர்ந்தது. மாலதி என்னிடம் பெரிய யுத்தம் ஆரம்பிக்கத் தயாராக இருந்தாள். சோமு (யோசனையோடு). சரோஜினியா? மாலதி : ஆமாம், அப்படி ஒரு சிங்காரி வந்தாள். எந்த ஆண்பிள்ளையையும் மயக்கிவிடுவாள். அ ப் ப டி ஆடம்பரம். வாசு : எத்தனை அழகியாக இருந்தாலும் சோமுவை மயக்க முடியாது. அவன்தான் கட்டைப் பிரம்மச் சாரியாச்சே, சோமு ; அடே, விஷயத்தைச் சொல்லாமல், என்னவோ எ ன் னே ப் பற் றி ஆரம்பித்துவிட்டாயே...எ ந் த சரோஜினி? வாசு : சரோஜினி உனக்குத் தெரியாது. அவள் புருஷன் ராகவனுக்கும் அவளுக்கும் ஏதோ மனஸ்தாபம். சோமு (ஆச்சரியத்துடன்) : ராகவன? அவன் இங்கே எப்படி வந்தான்?. வாசு : அவன்தான் திடீரென்று இன்றைக்கு வந்து சேர்ந்தான். அதோடு அந்த சரோஜினியைச் சுட்டுக் கொன்றதாக என்மீது கொலேக் குற்றமும் சாட்டிப் பயமுறுத்தின்ை.