பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குற்றவாளி 41 [சரோஜினி அவசரமாக உள் அறைக்குப் போகிருள். அவள் சென்றதை நன்கு பார்த்துவிட்டு ராகவன் டெலிபோனில் பேசுகிருன்..! ராகவன் : ஹலோ, நான் ராகவன் பேசுகிறேன். யார் மாலதிதானே ? வாசுதேவன் எங்கே ? மேல் மாடியிலா ?...அவருக்கு இனிமேல் ஒரு பயமும் இல்லையென்று சொல்லுங்கள். அதற்குத்தான் கூப்பிட்டேன்-அவர் என்ன செய்துகொண்டிருக் கிருர்?... என்ன? அவரும் சோமசுந்தரமும் சதுரங்கம் ஆடிக்கொண்டிருக்கிருர்களா ?-சரி, சரி. அவர்களே இப்போ தொந்தரவு செய்யாதீர்கள்-கூப்பிட வேண்டாம். நான் சொன்ன விஷயத்தை மட்டும் சொல்லிவிட்டால் போதும்-நான்:விமான நிலையத்தி விருந்துதான் பேசுகிறேன்-இன்னும் பத்து நிமி ஷத்தில் விமானம் புறப்படும். நமஸ்காரம். (ரிசீவரை வைத்துவிட்டு ராகவன் நடமாடுகிருன். சற்று நேரத்தில் சாவிக் கொத்தோடு சரோஜினி வருகிருள் 1 ராகவன் : இந்தச் சாவியைக் கொண்டுவர இவ்வளவு நேரமா ? சரோஜினி : அது எங்கேயோ கிடந்தது. உடனே கிடைக்கவில்லை. ராகவன் : சரி, வா போவோம். சரோஜினி : ஒரு டாக்ஸி கூப்பிடட்டுமா ? ராகவன் : பக்கந்தானே டாக்ஸி எதற்கு ? சரோஜினி : அப்பவும் அரைமைல் தூரமாவது இருக்கும்,