பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 குற்றவாளி ராகவன் : பரவாயில்லை. அங்கிருந்து வேண்டுமானல் விமான நிலையத்திற்கு டாக் ஸி வைத்துக் கொள்வோம். சரோஜினி : விமான நிலையத்திற்கா ? ராகவன் : ஆமாம். இரவு 9; மணி விமானத்தில் புறப் படவேண்டும். சரோஜினி (ஆவலோடு) : டெல்லிக்கா, பம்பாய்க்கா ? ராகவன் : அதெல்லாம் அப்புறம் சொல்லுகிறேன். வா போவோம். (அவசரமாக வெளியே போகிரு.ர்கள்.1 -திரை காட்சி ஐந்து (சோமசுந்தரத்தின் பங்களாவில் ஒரு சிறிய அறை. ஒரே இருட்டு. அதில் சோமசுந்தரம். வாசு தேவன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகிய மூவரும் பக்கம் பக்கமாக நாற்காலியில் அமர்ந் திருக்கிரு.ர்கள்.) வாசு : சோமு, நீ செய்கிறதெல்லாம் வேடிக்கையாக இருக்கிறது. எங்களை எதற்காக இந்த அறையிலே இப்படி அடைத்து வைத்திருக்கிருய் ? விளக்கை யாவது போடக்கூடாதா ? நல்ல வேடிக்கை. சோமு : இதில் வேடிக்கை ஒன்றுமில்லை. ராகவனும் சரோஜினியும் கட்டாயம் இங்கு வருவார்கள். என் பங்களாவில் ஒரு பெரிய நாடகம் நடக்கப் போகிறது.