பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 குற்றவாளி இன்ஸ் : மிஸ்டர் வாசு, உங்கள் நண்பர் சோமுவுக்கும் அந்த சரோஜினிக்கும் ஏதாவது தொடர்பு இருக்க வேண்டும். வாசு (சட்டென்று) : அதெல்லாம் ஒன்றுமில்லை ஸார். இவன் பிரம்மச்சரிய விரதம் பூண்டவன். ஒரு அரைப் பைத்தியம். இன்ஸ் : நான் அந்தமாதிரி தொடர்பைக் குறிக்கவில்லை. சரோஜினியை உபயோகப்படுத்தி உங்களிடம் பணம் பறிக்க ராகவன் திட்டமிட்டதைப் போலவே சோமுவையும் சரோஜினியைக் கொண்டு ஏமாற்றி யிருப்பான். வாசு : நீங்கள் எதனுல் அப்படி நினைக்கிறீர்கள் ? இன்ஸ் : இல்லாவிட்டால் சோமு எதற்காக இந்தப் பங்களிாவை அவளுக்கு எழுதிக் கொடுக்கிருர் ? வாசு ; அதுதான் எனக்கும் விளங்கவில்லை. மேலும் இந்த விஷயத்தைப் பற்றி அவன் என்னிடம் இது வரையில் சொல்லவே இல்லை. அவன் எதையும் என்னிடம் ஒளிக்கமாட்டான். இன்ஸ் : சோமு ஏதோ சூழ்ச்சியில் அகப்பட்டு எழுதிக் கொடுத்திருப்பார். ராகவன்தான் சூழ்ச்சி செய் திருக்க வேண்டும். தன்மேல் சந்தேகம் வராதபடி பங்களாவை சரோஜினி பேரில் எழுதி வாங்கி யிருக்கிருன். இப்பொழுது அதையும் தனக்கு மாற்றிக்கொண்டுவிட்டான். வாசு : ஆளுல், சரோஜினியை சோமு தெரிந்திருக்க சமயமே இல்லையே ?