பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 குற்றவாளி மனமுடைந்து அவருக்குப் பயித்தியம் பிடித்து விடுமோ என்று பயந்தேன். ராகவன் : ஆஹா! நல்ல பயம் ! என்ன இருந்தாலும் ஒருவருடைய .ெ சா த் ைத இப்படி வாங்கிக் கொள்ளலாமா ? சரோஜினி : நான் அவருடைய சொத்தை அனுபவிக்க நினைக்கவே இல்லை. அவரே உபயோகித்துக்கொண் டிருக்கவேண்டும் என்ற நிபந்தனையை அவர் ஏற்றுக் கொண்ட பிறகுதான் நான் பத்திரத்தை வாங்கிக் கொண்டேன். இன்று வரையிலும் இந்தப் பங்களா வுக்கு உரிமை கொண்டாட நான் எண்ணியதே கிடையாது. நீங்கள் கேட்ட பிறகுதான் உங்களுக்கு உயில்...... ராகவன் (கடுமையாக) : உயிலைப்பற்றி மறுபடியும் பேசாதே. சரோஜினி, உன் வார்த்தையிலே எனக்கு நம்பிக்கையேற்பட வேண்டுமானல் நீ இரண்டு காரியம் இப்பொழுதே செய்யவேணும். சரோஜினி : உங்களையே சதா நினைவில் வைத்துக்கொண் டிருக்கிறேனென்பதைக் காண்பிக்க என்ன வேண்டு மாலுைம் செய்யத் தயார். ஆனால், இனிமேலும் என்னை ஏமாறும்படி நீங்கள் செய்யக்கூடாது. ராகவன் ; நீ ஒரு சின்னக் கடிதம் எழுதி என்னிடம் கொடுக்கவேண்டும். சரோஜினி : எதைப் பற்றிக் கடிதம் ? ராகவன் : சோமசுந்தரம் போன் மூலம் உன்னை அன்வ பங்களாவுக்கு இன்று மாலேயில் வரச் சொன்ன தாகவும் அங்கே போய்விட்டு ஒரு மணியில் வந்து