பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5Ꮾ குற்றவாளி சரோஜினி விளங்காமலென்ன ? எல்லாம் விளங்கி யிருக்கும். கடிதம் கிடைத்துவிட்டால் பிறகு என்ன என்ன வேண்டுமானலும் செய்ய முடியாதா ? ராகவன் : சரோஜினி, இப்படிப் புதிர் போட்டுப் பேசிக் கொண்டிருக்காதே. நாம் விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன்னே கவனிக்க வேண்டிய காரியம் நிறைய இருக்கிறது. சரோஜினி : இப்பொழுதே போய் அவற்றைக் கவனிப் போம். இங்கே நமக்கு வேலையே இல்லை. ராகவன் (பொறுமை யிழந்து) ; நீ முதலில் கடிதத்தை எழுது...இந்தா பேன. (பேளுவை எடுத்துக் கொடுக்கிருன்.) சரோஜினி (பேணுவை வாங்காமல்) : எனக்கு உங்க ளுடைய சூழ்ச்சி ஒருவாறு விளங்குகிறது. எனக்கு என்ன நேர்ந்தாலும் சரி ; நான் உயிரோடு சோம சுந்தரத்திற்குத் திங்கு நேரச் சம்மதிக்கமாட்டேன். ராகவன் (கோபத்தோடு) : உயிரோடு ச ம் ம தி க் க மாட்டாயா ? அப்போ நீ பிணமாக வேண்டியது தான். இதோ என் கையிலே என்ன பார்த்தாயா ? (கைத் துப்பாக்கியை எடுத்து நீட்டுகிருன்..! சரோஜினி : ஐயையோ-இது உங்களிடமா இருக்கிறது ? மாலதியிடம் இந்தத் துப்பாக்கியைக் கொடுத்து விட்டதாகச் சொன்னிர்களே ? ராகவன் : மாலதியிடம் கொடுத்தது வெறும் பொம்மைத் துப்பாக்கி-இதுதான் வாசுதேவன் துப்பாக்கி. சரோஜினி : உங்களுடைய வஞ்சனேயெல்லாம் இப் பொழுதுதான் எனக்குத் தெளிவாகத் தெரிகிறது.