பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5S குற்றவாளி ராகவன் : என்னிஷ்டப்படி நீ செய்தாக வேண்டும். இல்லாவிட்டால் உன்னுடைய ஆசை நிறைவேருதுஎன்னோடு வாழ முடியாது. சரோஜினி : உங்களோடு வாழ முடியாதென்று உங்கள் நிபந்தனையைக் கேட்டபொழுதே தெரிந்துவிட்டது. நீங்கள் என்னைப் பயன்படுத்தி சோமசுந்தரத்திடமும் பணம் பறிக்க உத்தேசித்திருக்கிறீர்கள். நான் இந்தப் பங்களாவை உங்களுக்கு உயில் எழுதி வைத்ததே தப்பு. ராகவன் : அப்படி எழுதிக் கொடுக்காவிட்டால் உன்னை என் மனைவியாக ஏற்றுக் கொள்ளுவேனென்று நினைத்தாயா ? சரோஜினி : நான் உங்களுக்கு மனைவியே அல்ல. நீங்கள் அப்படி மனைவியாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்பதும் இப்பொழுது தெரிந்துவிட்டது. ராகவன் : ஒகோ! இப்போ தெரிகிறதா உனக்கு? எதற்காக இதுவரையில் நீ என் மனைவி என்று சொல்லிக்கொண்டு ஊரை ஏமாற்றி வந்தாய் ? சரோஜினி : நான் ஏமாற்றியதிருக்கட்டும் - நீங்க ள் இன்னமும் ஊரை ஏமாற்ற நான் சம்மதிக்க மாட்டேன். |சரோஜினி சாமர்த்தியமாக நாற்காலி ஒன்றை ராகவன்மீது தள்ளிவிடுகிருள். பிறகு வெளியே ஒட முயற்சி செய்கிருள்.) ராகவன் : இப்படி நாற்காலியைத் தட்டிவிட்டு ஒடித் தப்பவா பார்க்கிருய்-அதெல்லாம் இனி நடவாது.