பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் எங்கே ! 65 என்ன ? தூரப் போகப் போகத்தான் அன்பு அதிக மாகிறது. லலிதா : அதில்லே பானுமதி...அன்பு குறையாமல் போனலும் நீ பக்கத்திலே இருந்திருந்தால் எனக்கு எத்தனையோ ஆறுதலாக இருக்கும். இப்பொழுது என் மனத்தைத் திறந்து சொல்ல இங்கே எனக்கு யாருமே இல்லை. பானுமதி : லலிதா, நீ கடிதத்திலே எழுதுகிற விஷயம் எனக்குப் புரியவே இல்லை. அண்ணு என்ன அப்படி உதாசீனமாக இருக்கிருரா என்ன ? லலிதா : அப்படிச் சொல்லவும் முடியவில்லை. இருந் தாலும்...எனக்கென்னவோ... பானுமதி : இருந்தாலும்...உனக்கென்னவாமா ? இப்படி ஒருவர் வாய்க்கவேணுமே : பாங்கியிலே நிறைய சம்பாதிக்கிரு.ர்...கண்ணுக்கு லட்சணமான... லலிதா : பானுமதி, நீ என் உள்ளத்தைச் சரியானபடி புரிந்து கொள்ளவில்லை. அதுதான் இப்படிப் பேசுகிருய். பானுமதி : அதுதான் நான் முன்னமேயே சொன்னேனே -உன்னுடைய கடிதங்கள் எனக்கு அர்த்தமாகவே இல்லை. என்னமோ வளைத்து வளைத்து எழுதுகிருய். கடைசியிலே பார்த்தால் ஒண்ணையும் காணுேம். லலிதா உன் சிநேகிதி யிடத்திலே அவ்வளவுதான் உனக்கு அன்பு-இல்லாவிட்டால் என் கடிதம் உனக்கு விளங்காமல் போகாது... (பெருமூச்சு விடுகிருள்.)